1 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
புதுச்சேரி: நகராட்சி சுகாதார அதிகாரி மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு குழு அதிகாரிகள் நடத்திய சோதனையில், 1 டன் பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து, 32 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.
புதுச்சேரியில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகள், கப்புகள், தட்டுகள் போன்ற 15 வகையான பொருட்களை உற்பத்தி மற்றும் விற்பனை செய்வதற்கு அரசு தடை விதித்துள்ளது.
அதனை கட்டுப்படுத்தும் வகையில், புதுச்சேரி மாசுக்கட்டுப்பாட்டு குழுமம் மற்றும் நகராட்சி இணைந்து ரங்கப்பிள்ளை வீதியில் உள்ள கடைகளில் அதிகாரிகள் விமல்ராஜ், தொழில்நுட்ப ஆலோசகர் சீனுவாசன் அடங்கிய குழுவினர் நேற்று சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, 12 கடைகளில் விற்ற 1 டன் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து, அந்த கடைகளுக்கு 32 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். தொடர்ந்து, மேட்டுப்பாளையம் பகுதி பிளாஸ்டிக் தொழிற்சாலைகளில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
மேலும்
-
புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தில் குரு பூர்ணிமா விழா கோலாகல கொண்டாட்டம்
-
சமரச தீர்வு மையத்தில் தமிழக நிதி அமைச்சர் ஆஜர்!
-
'மாதவிடாய் விடுப்பு கோரிய வழக்கில் அரசு எடுத்த நடவடிக்கை என்ன? ஐகோர்ட் கிளை கேள்வி
-
இணையவழி மோசடி புகார்களில் காப்பாற்றப்பட்டது ரூ.11,158 கோடி
-
24 மணிநேரம் 24 நிமிடங்கள் பறந்த ஏர்பஸ் விமானம்; வானில் அதிக நேரம் பறந்து சாதனை
-
வருமானம் ஈட்டும் கணவன் - மனைவி குடும்ப செலவை சமமாக பங்கிட வேண்டும்; விவாகரத்து வழக்கில் ஐகோர்ட் அதிரடி