மாவட்டத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கு கற்கள் எடுத்து சென்றால் கடும் நடவடிக்கை

நாமக்கல்; 'மாவட்டத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கு, கற்கள் எடுத்து சென்றால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, நாமக்கல் கலெக்டர் மதுபாலன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:தமிழகத்தில் இருந்து, பிற மாநிலங்களுக்கு சாதாரண கற்கள் மற்றும் கலவை கற்கள் கொண்டு செல்வதற்கு, மூன்று மாதங்களுக்கு தற்காலிக தடை விதித்து ஆணையிடப்பட்டுள்-ளது. அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில், தற்-போது செயல்பட்டு வரும் அனைத்து கல்குவாரி உரிமையாளர்கள், கிரஷர் யூனிட் உரிமையா-ளர்கள், எம்.சாண்ட் உற்பத்தியாளர்கள், மினரல் டீலர்கள், தொடர்புடைய அனைவரும், முறை-யாக கடைப்பிடிக்க வேண்டும்.
இந்த தடையின் கீழ் பாறை கற்கள், அளவு குறைக்கப்பட்ட உடைக்கப்பட்ட அல்லது நொறுக்கப்பட்ட பொருட்கள், எம்.சாண்ட், ஜல்லி, ரெயில் பாதை கற்கள், சாலை கட்டுமான கற்கள் ஆகியவை அடங்கும். இவற்றை தமிழகத்தின் எல்லையை கடந்து பிற மாநிலங்களுக்கு கொண்டு செல்லக்கூடாது.
ஆனால், புதுச்சேரி, புதுச்சேரி யூனியன் பிரதே-சத்தின் காரைக்கல் மாவட்டத்திற்கு தடை பொருந்தாது. தமிழகத்தில் நடந்து வரும் உட்கட்-டமைப்பு, வீட்டு வசதி மற்றும் தொழில் வளர்ச்சி பணிகளுக்கு தேவையான கட்டமைப்பு பொருட்கள், போதுமான இருப்பை மாநிலத்திற்கு உறுதி செய்யவும், கனிம வளங்களை பாதுகாக்-கவும், சட்டவிரோத சுரங்கம், சுற்றுச்சூழல் மற்றும் சூழலியல் பாதுகாப்பு ஆகியவற்றை உறுதி செய்வதற்காக இந்த தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கல்குவாரி, கிரஷர் உரிமையாளர்கள், பிற மாநிலங்களுக்கு சாதாரண கற்கள், கலவை கற்கள் கொண்டு செல்-லவோ, விற்பனை செய்யவோ கூடாது. அதற்கு உடந்தையாக இருத்தல் போன்ற நடவடிக்-கையில் ஈடுபட கூடாது. இந்த தடையை மீறி எடுத்து சென்றால், அவர்கள் மீது கடும் நடவ-டிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement