புது மாப்பிள்ளை விபத்தில் பலி

ப.வேலுார்; ப.வேலுார், வடக்கு நல்லியாம்பாளையத்தை சேர்ந்தவர் விமல்ராஜ், 35; பரமத்தி பெட்ரோல் பங்கில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி சூர்யா, 30; இவர்களுக்கு திருமணமாகி, இரண்டு மாதம் ஆகிறது.


நேற்று காலை, 8:30 மணிக்கு, விமல்ராஜ் வேலைக்கு செல்ல வீட்டிலிருந்து பெட்ரோல் பங்கிற்கு, 'எக்ஸல் சூப்பர்' மொபட்டில் புறப்-பட்டார். சுண்டப்பனை அருகே சென்றுகொண்டி-ருந்தபோது, எதிரே தண்ணீர் ஏற்றி வந்த டேங்கர் லாரி விமல்ராஜ் மீது மோதி சம்பவ இடத்தி-லேயே உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்திய கூடச்சேரியை சேர்ந்த லாரி டிரைவர் ரங்கராஜ், 52, என்பவரை, பரமத்தி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.திருமணமாகி இரண்டு மாதத்தில் புதுமாப்-பிள்ளை விமல்ராஜ், சாலை விபத்தில் உயிரி-ழந்த சம்பவம் உறவினர்
களிடையே சோகத்தை
ஏற்படுத்தியது.

Advertisement