ஒடிசா, குஜராத்தில் இருந்து வாங்கி போதை மாத்திரை விற்ற 9 பேர் கைது
பள்ளிப்பாளையம்; வெப்படை சுற்று வட்டாரத்தில் போதை மாத்-திரை விற்ற, இரண்டு சிறுவர்கள் உள்பட, ஒன்-பது பேரை வெப்படை போலீசார் கைது செய்-தனர்.
நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையம் அருகே வெப்படை பகுதியில் போதை மாத்திரை விற்ப-தாக, போலீசாருக்கு தகவல் வந்தது. இதைய-டுத்து, நேற்று மாலை, வெப்படை அடுத்த லட்சு-மிபாளையம் பிரிவு பகுதியில் போலீசார் கண்கா-ணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, போதை மாத்-திரை விற்ற, பள்ளிப்பாளையம் பகுதியை சேர்ந்த லட்சுமணன், 23, என்பவரை பிடித்து கைது
செய்தனர்.
விசாரணையில், பள்ளிப்பாளையத்தை சேர்ந்த சதீஷ்குமார், 26, கோகுல், 23, களியனுாரை சேர்ந்த கவுரிசங்கர், 24, குணா, 21, ஈரோட்டை சேர்ந்த ஜீவானந்தம், 23, சதீஷ்குமார், 19, மற்றும் 17 வயது சிறுவர்கள் இருவர் உள்பட, ஒன்பது பேரை வெப்படை போலீசார், நேற்று மாலை கைது செய்தனர். இவர்கள், ஒடிசா, குஜராத்தில் இருந்து, ஆன்லைன் மூலம் ஒரு மாத்திரை, 35 ரூபாய்க்கு வாங்கி, 250 ரூபாய்க்கு விற்பனை செய்தது தெரியவந்தது. சிறுவர்கள் இருவரையும், சேலம் சீர்
திருத்தப்பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். இவர்க-ளிடம் இருந்து, 380 போதை மாத்திரை, ஒரு டூவீலர் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட லட்சுமணன், ஏற்கனவே போதை மாத்திரை விற்ற வழக்கில், கடந்தாண்டு பள்ளிப்பாளையம் போலீசாரால் குண்டர் சட்-டத்தில் கைது செய்யப்பட்டார். 20 நாட்களுக்கு முன்பு தான் சிறையில் இருந்து வெளியே வந்-துள்ளார். தற்போது, மீண்டும் போதை மாத்திரை விற்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்-பிடத்தக்கது.
மேலும்
-
மீன் விற்பனை செய்ததில் ரூ.16.53 லட்சம் முறைகேடு; 5 அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு
-
மரம் வெட்டிய 2 பேருக்கு தலா ரூ.1 லட்சம் அபராதம்
-
தமிழகத்தின் நலனை மத்திய அரசு பாதுகாக்கும்: மேகதாது விவகாரத்தில் தமிழக பா.ஜ., உறுதி
-
அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு
-
மாணிக்கம் தாகூர், நயினாருக்கு எதிரான தேர்தல் விதிமீறல் வழக்குகள் ரத்து
-
'சமூக ஆர்வலர்கள் பாதுகாப்பிற்கு தனிச்சட்டம் நிறைவேற்றுங்கள்'