பைக் மீது லாரி மோதி பெயின்டர் பரிதாப பலி
நாமகிரிப்பேட்டை; ராசிபுரம், குமாரசாமி தெருவை சேர்ந்தவர் ஜலா-வுதீன், 51; பெயின்டர். இவர், நேற்று முன்தினம் இரவு, ஆத்துார் மெயின் ரோட்டில், நாமகிரிப்-பேட்டை அண்ணா வாரச்சந்தை அருகே டூவீ-லரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அதே திசையில் பின்னால் வந்த லாரி, எதிர்பாராதவிதமாக டூவீலர் மீது மோதியது. இதில் கட்டுப்-பாட்டை இழந்த டூவீலர் லாரியின் இடது பக்க சக்கரங்களுக்கு இடையே சிக்கி விபத்துக்குள்ளா-னது.
இந்த விபத்தில் லாரியின் பின் சக்கரம் ஏறி இறங்கியதில் ஜலாவுதீன் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடினார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு, ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து, ஜலாவுதீனின் மனைவி குல்ஜார், 51, அளித்த புகார்படி, நாமகிரிப்பேட்டை போலீசார், விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவரான திருச்சி மாவட்டம், துறையூர் தாலுகா, துக்கலாம்பட்-டியை சேர்ந்த அண்ணாதுரை, 32, என்பவரிடம் விசாரித்து வருகின்றனர்.
மேலும்
-
மீன் விற்பனை செய்ததில் ரூ.16.53 லட்சம் முறைகேடு; 5 அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு
-
மரம் வெட்டிய 2 பேருக்கு தலா ரூ.1 லட்சம் அபராதம்
-
தமிழகத்தின் நலனை மத்திய அரசு பாதுகாக்கும்: மேகதாது விவகாரத்தில் தமிழக பா.ஜ., உறுதி
-
அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு
-
மாணிக்கம் தாகூர், நயினாருக்கு எதிரான தேர்தல் விதிமீறல் வழக்குகள் ரத்து
-
'சமூக ஆர்வலர்கள் பாதுகாப்பிற்கு தனிச்சட்டம் நிறைவேற்றுங்கள்'