ஹோண்டா 'இசட்.ஆர்., - வி' 2.0 லிட்டர் இன்ஜின், 22.8 கி.மீ., மைலேஜ்
'ஹோண்டா' நிறுவனம், அதன் 'இசட்.ஆர்., - வி' என்ற ஹைபிரிட் எஸ்.யூ.வி., காரை அறிமுகம் செய்துள்ளது. ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு, முதற்கட்டமாக 120 கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
இந்த காரில், 2 லிட்டர், 4 சிலிண்டர், ஸ்ட்ராங் ஹைபிரிட் இன்ஜின் வருகிறது. இந்த இன்ஜின், 'இ - சி.வி.டி.,' என்ற ஆட்டோ கியர்பாக்சில் இணைக்கப்பட்டுள்ளது. ஸ்ட்ராங் ஹைபிரிட் கார் என்பதால், நகரப்புற பயன்பாட்டில் பெரும்பாலான நேரம் மின்சார மோடில் இயங்கும் திறன் உடையது. இதனால், 22.8 கி.மீ., மைலேஜ் தருவதாக இந்நிறுவனம் கூறுகிறது.
நீளம் 4.6 மீட்டர் உள்ள இந்த காரில், 18 அங்குல அலாய் சக்கரங்கள், பிரீமியம் உட்புற மற்றும் வெளிப்புற வடிவமைப்பு, டூயல் எக்ஸாஸ்ட் அமைப்பு, 360 டிகிரி கேமரா, 12 ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம், பவர்டு முன்புற சீட், எலக்ட்ரிக் டெயில்கேட், அடாஸ் லெவல் 2, எட்டு காற்று பைகள், ஹில் ஸ்டார்ட் மற்றும் டிசென்ட் கன்ட்ரோல், உள் அலங்கார விளக்குகள், ஒயர்லெஸ் போன் இணைப்பு வசதி மற்றும் சார்ஜிங் என பல அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. சன் ரூப், குளுகுளு சீட் அம்சங்கள் இல்லை.
மொத்தம் நான்கு நிறங்களில் வரும் இந்த காருக்கு, 3 ஆண்டு கார் உத்தரவாதமும், 8 ஆண்டு அல்லது 1.60 லட்சம் கி.மீ., பேட்டரி உத்தரவாதமும் வழங்கப்படுகிறது.
மேலும்
-
மினி டெம்போ வாகனம் மோதி கார் கவிழ்ந்து 5 பேர் படுகாயம்
-
கிணற்றில் தவறி விழுந்த முதியவர் சாவு
-
அக்கராயபாளையத்தில் திருத்தேர் திருவிழா
-
பெண்கள் மீதான அவதுாறு குறித்து நடவடிக்கை த.வெ.க., ஆட்சி மீது சி.வி.சண்முகம் காட்டம்
-
பழந்தமிழ் எழுத்துகள் ஒரு நாள் பயிலரங்கம்
-
பாரதிதாசன் மகளிர் கல்லுாரியில் கல்லீரல் ஆரோக்கிய விழிப்புணர்வு