பார்லி.யை தவறாக பயன்படுத்தி பொய் பேசும் ராகுல்; மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கண்டிப்பு

4

புதுடில்லி: எதிர்க்கட்சி தலைவர் ராகுல் அவையை தவறாக பயன்படுத்துகிறார், அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கண்டித்து உள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது;

உண்மையில் துப்பாக்கிச்சூடு நடக்கவில்லை. அப்படி இருக்கும் போது எதிர்க்கட்சி தலைவர் அவையில் ஆதாரமற்ற மற்றும் பொய்யான கருத்தை, ஆதாரமற்ற, அடிப்படையற்ற குற்றச்சாட்டு வைத்தததை வன்மையாக கண்டிக்கிறேன். ராகுல் பேசுவதற்கு ஆக்கப்பூர்வமான கருத்து ஏதும் இல்லை என்று நான் நினைக்கிறேன்.

ஒரு மணிநேரத்திற்கும் மேலாக மசோதா குறித்தோ, விவாதத்திற்கு தொடர்புடைய கருத்து குறித்தோ அவர் ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்பதை நாங்கள் கவனித்தோம். அவரின் பேச்சு முழுக்க, முழுக்க பொய்களின் ஒட்டுமொத்த தொகுப்பாகவே இருக்கிறது.

குழந்தைகளின் நலன்களில் இந்த அரசு அக்கறை காட்டி வருகிறது. குழந்தைகள் அவரை (ராகுலை குறிப்பிடுகிறார்) பாராட்டாததன் விரக்தி தான் இப்படி வெளிப்படுகிறது.

துப்பாக்கிச்சூடு நடக்காத போது, எத்தகைய பொய்யான குற்றச்சாட்டை ராகுல் முன் வைக்கிறார். அவையிலும், நாட்டு மக்களிடமும் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். அவையில் பதிவான நடவடிக்கைகள் அனைத்தும் முழுமையாக நீக்கப்பட வேண்டும்.

பொய்யான கருத்துகளை அவையில் அனுமதிக்கக்கூடாது. அவையை தவறாக பயன்படுத்தும், ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement