எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் அமளி; முடங்கியது பார்லிமென்ட்

14



நமது டில்லி நிருபர்




பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடரில் இன்று (ஜூலை 31) எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியால் இருஅவைகளும் முடங்கின. மீண்டும் வரும் ஆகஸ்ட் 3ம் தேதி காலை 11 மணிக்கு இரு அவைகளும் கூடும்.

பார்லி., மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 20ம் தேதி துவங்கியது. அவை துவங்கிய முதல் நாளில் இருந்தே எதிர்க்கட்சி எம்பிக்கள் டில்லி போராட்டத்தில் இளைஞர்கள் மீதான தடியடி சம்பவம் உள்ளிட்டவற்றை விவாதிக்க கோரி அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டு, பிறகு மீண்டும் கூடி நடந்து வருகிறது. இரு அவைகளிலும் பெரும்பாலான நேரங்களில் எந்த அலுவல் பணிகளும் நடக்காமல் முடங்கி வருகின்றன.

இந்நிலையில் இன்றும் (ஜூலை 31) காலை 11 மணிக்கு லோக்சபா கூடியதும் எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். சபாநாயகர் ஓம்பிர்லா பலமுறை எச்சரித்தும் எம்பிக்கள் கண்டு கொள்ளாமல் தொடர் அமளியில் ஈடுபட்டனர். இதனால் கடும் கூச்சல், குழப்பம் நிலவியது.

அவையை மதியம் 12 மணி வரை சபாநாயகர் ஓம்பிர்லா ஒத்திவைத்தார். மீண்டும் 12 மணிக்கு அவை கூடிய போதும் எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவையை வரும் ஆகஸ்ட் 3ம் தேதி காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

ராஜ்யசபா




அதேபோல் ராஜ்யசபாவிலும் காலை 11 மணிக்கு அவை கூடியதும், எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் கடும் கூச்சல், குழப்பம் நிலவியது.

சபையை நாள் முழுவதும் அவை தலைவர் ஒத்திவைத்தார். நாளை, நாளை மறுநாள் சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் மீண்டும் அவை ஆகஸ்ட் 3ம் தேதி காலை 11 மணிக்கு கூடும்.


@block_G@

வீணாகும் மக்கள் வரிப்பணம்!

பார்லிமென்ட்டில் ஆக்கப்பூர்வமான அலுவல் பணிகளை நடத்தவிடாமல் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருவதால், ஒவ்வொரு மணி நேரமும் கோடிக்கணக்கான ரூபாய் வீணாகி வருகிறது. எந்தவொரு விவாதத்தையும் நடத்தவிட மாட்டோம் என எதிர்க்கட்சிகள் பிடிவாதம் பிடித்து வருகின்றன. இதனால், முக்கிய மசோதாக்கள் நிறைவேறுவதிலும், ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடப்பதிலும் சிக்கல் நீடிக்கிறது.

எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக இரு சபைகளும் ஒத்தி வைக்கப்பட்டதால், ஏற்பட்ட நிதியிழப்பும், ஜனநாயக பின்னடைவும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது. தொகுதி பிரச்னைகளையும், நாட்டின் முக்கிய விவகாரங்களையும் எம்.பி.,க்களால் சபையின் கவனத்திற்கு கொண்டு செல்ல முடிவதில்லை. இரு சபைகளும் முடங்குவதால் ஒருபுறம் மக்களின் வரிப் பணம் வீணாவதுடன், மறுபுறம் மக்களின் முக்கிய பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியாத சூழலும் ஏற்படுகிறது.block_G

Advertisement