மோசமான வானிலை; திருவனந்தபுரத்திற்கு திருப்பி விடப்பட்ட விமானங்கள்... பயணிகள் அவதி

திருச்சி: மோசமான வானிலை காரணமாக திருச்சி விமான நிலையத்திற்கு வந்த இரு விமானங்கள் திருவனந்தபுரத்திற்கு திருப்பி விடப்பட்டன.

இது விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது; மாலியில் இருந்து இண்டிகோ விமானமும், கொச்சியில் இருந்து ஏ இந்தியா எக்ஸ்பிரஸ் விமானமும் இன்று காலை திருச்சி விமான நிலையத்திற்கு வந்தது. ஆனால், மோசமான வானிலை காரணமாக விமானங்கள் தரையிறங்க முடியாது சூழல் ஏற்பட்டது. இதையடுத்து, கட்டுப்பாட்டு மையத்தின் மூலம், விமானிகளை தொடர்பு கொண்டு, திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டது.

அதன்படி, இரு விமானங்களும் திருவனந்தபுரத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது. வானிலை சீரடைந்தவுடன் மீண்டும் விமான சேவைகள் துவங்கப்படும், இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோசமான வானிலை காரணமாக திருச்சியில் தரையிறங்க வேண்டிய விமானங்கள், திருவனந்தபுரத்தில் தரையிறங்கியதால், பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.

Advertisement