தினமலர் செய்தி எதிரொலி: அரசு பள்ளிகளுக்கு கிடைத்தது நிதி
மதுரை: தினமலர் செய்தி எதிரொலியாக மதுரையில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளுக்கும் ஆண்டு விழா நிதியை அரசு ஒதுக்கீடு செய்தது.
பள்ளி செயல்பாடு, மாணவர் சாதனை, வளர்ச்சி பணிக்கு திட்டமிடுவது தொடர்பாக அரசு பள்ளிகளில் ஆண்டுதோறும் பிப்., முதல் மார்ச் வரை ஆண்டு விழாக்கள் கொண்டாடப்படும். இதற்காக மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப ரூ.2 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை அரசு நிதி ஒதுக்கீடு செய்யப்படும். கடந்தாண்டுக்கான நிதி கடந்த வாரம் வரை பள்ளிகளுக்கு கிடைக்காமல் இருந்தது.
இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து சி.இ.ஓ., தயாளன் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். மதுரை, மேலுார் டி.இ.ஓ., அலுவலகங்கள் மூலம் சம்பந்தப்பட்ட அனைத்து அரசு பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் வங்கிக் கணக்கிற்கு இந்நிதி வரவு வைக்கப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அணைகள் நீர்ட்டம்
-
செந்தில் பாலாஜி முன்ஜாமின் வழக்கில் இருந்து உச்சநீதிமன்ற நீதிபதி மோகனா விலகல்
-
ஒரு செங்கல்லை கூட எடுத்து வைக்க அனுமதிக்கமாட்டோம்; அமைச்சர் செங்கோட்டையன் உறுதி
-
மோசமான வானிலை; திருவனந்தபுரத்திற்கு திருப்பி விடப்பட்ட விமானங்கள்... பயணிகள் அவதி
-
எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் அமளி; முடங்கியது பார்லிமென்ட்
-
பழம்பெரும் பாடகி ஜமுனா ராணி காலமானார்
Advertisement
Advertisement