அரவிந்தர் கல்லுாரியில் வகுப்பு துவக்கம்

புதுச்சேரி: சேதராப்பட்டு, அரவிந்தர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான துவக்க விழா நடந்தது.

கல்லுாரி கலையரங்கில் நடந்த விழாவிற்கு கல்லுாரி தலைவர் நித்தியானந்தன் தலைமை தாங்கினார். கல்லுாரி முதல்வர் சிவசங்கரி முன்னிலை வகித்து, கல்லுாரியின் விதிமுறைகள் மற்றும் நலத்திட்டங்கள் குறித்து மாணவர்களுக்கு விளக்கம் அளித்தார்.

விழாவில், பட்டிமன்ற பேச்சாளர் வழக்கறிஞர் அருண் கலந்து கொண்டு, கல்வியின் முத்தியத்துவம், ஒழுக்கம் மற்றும் சமூக ஊடகங்களை பயன்படுத்தும் முறைகள் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.

இதில், கல்லுாரியின் முதலாம் ஆண்டு மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement