கோரைப்புற்களால் துார்ந்துள்ள வடிகால் மழைக்கு முன் சரிசெய்ய மக்கள் வலியுறுத்தல்
காஞ்சிபுரம்: தென்மேற்கு பருவமழை தீவிரமடைவதற்குள், ஆற்பாக்கத்தில் கோரைப்புற்கள் வளர்ந்து, துார்ந்த நிலையில் உள்ள மழைநீர் வடிகாலை துார்வாரி சரிசெய்ய வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம் ஒன்றியம், ஆற்பாக்கத்தில் மழைநீர் செல்லும் வடிகாலை முறையாக பராமரிக்காததால், கோரைப்புற்கள் வளர்ந்துள்ளன.
இதனால், தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து பலத்த மழை பெய்தால், வடிகால் மூலம் வெளியேற வேண்டிய மழைநீர் அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களை சூழும் அபா யம் உள்ளது.
எனவே, தென்மேற்கு பருவமழை தீவிரமடைவதற்குள், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆற்பாக்கத்தில் மழைநீர் செல்லும் வடிகாலை துார்வாரி சரிசெய்ய வேண்டும் என, ஆற்பாக்கம் பகு தி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement