தொகுதி மறுவரையறை மசோதா: பார்லி.,யில் அடுத்த வாரம் தாக்கல்
- நமது சிறப்பு நிருபர் -
பார்லி.,யில் அடுத்த வாரம், தொகுதி மறுவரையறை, வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்திருத்த மசோதாக்களை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பார்லி., மழைக்கால கூட்டத்தொடர், கடந்த 20ல் தொடங்கியது. வரும் 13 வரை நடக்கவுள்ள நிலையில், முதலிரண்டு வாரங்கள் எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியில் சரிவர அலுவல்கள் நடக்கவில்லை. டில்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்திய கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் மீதான தடியடி விவகாரத்தை முன்னிறுத்தி எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால், லோக்சபா, ராஜ்யசபா என இரு சபைகளும் அடுத்தடுத்து முடங்கின.
எனினும், எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கிடையே, அறிமுகப்படுத்திய சில நிமிடங்களிலேயே, தேசிய கவுரவ அவமதிப்பு தடுப்பு திருத்த மசோதா - 2026, பிறப்பு மற்றும் இறப்பு பதிவு திருத்த மசோதா - 2026 ஆகியவற்றை, பார்லி.,யில் கடந்த வாரம் மத்திய அரசு நிறைவேற்றியது.
இந்நிலையில், பார்லி., மழைக்கால கூட்டத்தொடரின் அடுத்த வாரத்தில், வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை திருத்த மசோதா - 2026ஐ அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அரசு சாரா அமைப்புகளை ஒடுக்கவே மத்திய அரசு இந்த மசோதாவை கொண்டு வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றன.
இதே போல், மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவுடன் இணைக்கப்பட்ட தொகுதி மறுவரையரை மசோதாவையும் வரும் நாட்களில் அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக, 131வது அரசியலமைப்பு சட்டத்திருத்தம் செய்யப்பட உள்ளது. இதற்கு மூன்றில் இரு பங்கு ஆதரவு தேவை என்பதால், மத்திய அரசு என்ன செய்யப் போகிறது என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
கரூர் மேடையில் முதல்வர் விஜய் அவர்கள் சொன்னார் இந்த தொகுதி மறுவரையை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று . அவரிடம் MP க்கல் இல்லை ஆனாலும் ஏதாவது புரட்சி செய்து சாதிப்பார் .
மழைக்கால கூட்டத்தொடரின் அடுத்த வாரத்தில், வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை திருத்த மசோதா - 2026ஐ அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது......என்ன தான் விடியல் முக்கி முக்கி இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தாலும் , வோட்டு மீண்டும் விடியலுக்கு வரவே வராது .....அது போனது போனதுதான் ....விடியல் காலம் முழுக்க இனிமேல் நிரந்தரமாக வெளியேதான்
இச்சட்டத்தினால் பார்லிமெண்டில் தமிழக எம்பிக்களின் சதவீதம் மாறப் போவதில்லை எனும்போது எதற்கு இந்த எதிர்ப்பு?. நீண்டகாலமாக சமத்துவம் பேசும் திமுக கட்சித்தலைவர் அல்லது முதல்வராக ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுத்ததில்லை. பரிசீலனை செய்தது கூட இல்லை. முக்கிய இலாகாக்கள் ஒதுக்கியதில்லை.
இந்திய மகளிர் இட ஒதுக்கீடு வேட்பாளர் மசோதாவுடன் இணைக்கப்பட்ட தொகுதி மறுவரை மசோதா ஆண் ஆதிக்க திராவிட, காங்கிரஸ் கட்சிக்கு சற்று இடையூறு.
எந்த மாநிலமும் 3 ல் 2 பங்கு உறுப்பினர் பெற முடியாது. குடும்ப கட்டுப்பாடு மாநிலங்கள் உரிமை பறிபோகும் என்பது விதண்டா வாதம். அனைத்து கட்சி உறுப்பினர்கள் மக்கள் நலம் கருதி ஆதரிக்க வேண்டும்.
ராஜ்யசபா உறுப்பினர் தொழில் அதிபர், சிறந்த கல்வி நிபுணருக்கு மட்டும். சட்டம் மூலம் அமுல் படுத்த முடியாவிட்டால் நீக்க யோசிக்கலாம்.
Idea is good, opposition will not pass the bill.
அரசு சாரா தொண்டு அமைப்பு நன்கொடை நிதியை நல்வழிக்கு பயன்படுத்தினால், சட்ட பாதுகாப்பு கிடைக்கும். தீய வழிக்கு பயன்படுத்தினால் அரசு ஒடுக்க தான் செய்யும்.
போலி நிறுவனம், கல்லூரி, மருத்துவமனை.. போன்ற பலவற்றை இன்னும் அரசு ஒழுங்குபடுத்த முடியவில்லை. எதிர்க்க முகாந்திரம் இல்லை.
எதிர்கட்சி பாட்டுக்கு கத்திக்கிட்டு கிடப்பாங்க, சத்தத்தில் அரசு மசோதாவை நிறைவேற்றி போய்கிட்டே இருக்கும்.மேலும்
-
இதே நாளில் அன்று
-
'இவ்வளவு நெருக்கடியா?'
-
சிந்து நதிநீர் ஒப்பந்தம் சிதைய பாகிஸ்தானே காரணம்: இந்திய துாதர் குற்றச்சாட்டு
-
'இப்படி முறுக்கிட்டு நிற்கணுமா?'
-
பேச்சு, பேட்டி, அறிக்கை
-
மழைநீர் வடிகால்களை சுத்தம் செய்வதை கண்காணிக்க வந்தாச்சு 'ஆப்'பு : மாநகராட்சியில் 'டிமிக்கி' அலுவலர்களுக்கு கமிஷனர் 'செக்'