ரேஷன் கார்டில் கைரேகை பதிவு புதுப்பிக்க இன்று இறுதி வாய்ப்பு
காஞ்சிபுரம்: அனை த்து ரேஷன் கடைகளிலும், இன் று ஒரு நாள் கைரேகை, கருவிழி ஆகிய பதிவுகளை புதுப்பிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக, காஞ்சி புரம் கலெக்டர் சினேகா தெரிவித்து ள்ளார்.
இதுகுறித்து, காஞ்சிபுரம் கலெக்டர் சினேகா வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தே சிய உணவு பாதுகாப்பு - 2023ன் படி முன்னுரிமை மற்றும் அந்தியோதயா அன்ன யோஜனா திட்டத்தின் ரேஷன் கார்டு வைத்துள்ளோர் ஆதார் எண் விபரங்களை சரிபார்க்க, விரல் ரேகை மற்றும் கருவிழி பதிவை புதுப்பிக்க அந்தந்த தாலுகா அலுவலக ஆதார் சேவை மையங்களை நாடலாம் என அறிவிக்கப்பட்ட து.
புதுப்பிக்க தவறியவர்கள், இன்று ஒரு நாள் அனைத்து ரேஷன் கடைகளிலும், கைரேகை, கருவிழி ஆகிய பதிவுகளை புதுப்பிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
அந்தந்த பகுதி மக்க ள் ரேஷன் பொருட்கள் வாங்கும் கடைகளில் சென்று கைரேகை, கருவிழி ஆகிய பதிவுகளை புதுப்பித்துக் கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.