பைக் மீது லாரி மோதல் 'மாஜி' போலீஸ்காரர் பலி
குன்றத்துார்: குன்றத்துார் அருகே, பை க் மீது லாரி மோதிய விபத்தில், விருப்ப ஓய்வு பெற்ற 32 வயது போலீஸ்காரர் உயிரிழந்தார்.
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுந்தர், 32. தமிழக காவல் துறையில், பட்டாலியன் பிரிவில் பணியாற்றிய இவர், நான்கு ஆண்டுகளுக்கு முன், விருப்ப ஓய்வு பெற்றார்.
பரங்கிமலையில் தங்கி, தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் சுரேஷ், 30, என்பவரை பார்க்க, நேற்று முன்தினம் வந்துள்ளார்.இருவரும், 'ஹோண்டா ட்ரீம் யுகா' பைக்கில், குன்றத்துார் அரு கே, சென்ற போது பின்னால் வந்த லாரி, இவர்கள் சென்ற பைக் மீது மோதியது.
இதில், பைக் ஓட்டிய சுந்தர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சுரேஷ், காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறா ர்.
குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், லாரி ஓட்டுநர் ரமேஷ், 43, என்பவரை, கைது செய்து விசாரிக்கின்றனர்.