இந்திய கம்யூ., ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூ.,வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட செயலாளர் ராமசாமி தலைமை தாங்கினார். மாவட்ட துணைச் செயலாளர்கள் சுப்ரமணியன், அப்பாவு, பொருளாளர் கலியபெருமாள், தமிழ்நாடு விவசாய தொழிலாளர்கள் சங்க மாநில செயலாளர் பாஸ்கர், தமிழக ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்க மாநில துணைத்தலைவர் சரவணன் கண்டன உரையாற்றினர். மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர்கள் சின்னசாமி, கஜேந்திரன், சிவக்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

மேகதாது அணை கட்டுவதை அனுமதிக்கக்கூடாது. நதிநீர் பகிர்வில் உச்சநீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பை கர்நாடகா மதித்து நடக்க வேண்டும்.

தமிழ்நாட்டின் உரிமையில் சமரசம் கூடாது. டெல்டா பாசன பகுதியில் கடுமையான வறட்சி பகுதிக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

Advertisement