சப் இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 6 சப் இன்ஸ்பெக்டர்களை பணியிட மாற்றம் செய்து எஸ்.பி., உத்தரவிட்டுள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் துறையில் சப் இன்ஸ்பெக்டர்களாக வரஞ்சரத்தில் பணிபுரிந்த மாணிக்கம் கீழ்குப்பம் காவல் நிலையதத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

அதேபோல், சின்னசேலம் நந்தகோபால் வரஞ்சரத்திற்கும், எடைக்கல் கார்த்திக் ரிஷிவந்தியத்திற்கும், திருக்கோவிலுார் மணிபாரதி எடைக்கல் காவல் நிலையத்திற்கும் மாற்றப்பட்டனர்.

மேலும், ரிஷிவந்தியம் ஹரிகிருஷ்ணன் திருக்கோவிலுாருக்கும், கட்டுப்பாட்டு அறையில் பணிபுரிந்த சிவச்சந்திரன் திருப்பாலப்பந்தலுக்கும் பணியிட மாற்றம் செய்து, எஸ்.பி., ஷஹ்னாஸ் உத்தரவிட்டுள்ளார்.

Advertisement