என்ன வேணும்னு முடிவு பண்ணுங்க.. சமைச்சுத்தர காத்திருக்கு ஏ.ஐ.,!

ஏ. ஐ., இப்போ கம்ப்யூட்டர், மொபைலை தாண்டி நம்ம வீட்டு சமையலறைக்குள்ளயும் புகுந்துடுச்சு.

'சமையலுக்கு கொஞ்சம் காய்கறி நறுக்கி குடுங்க'ன்னு இனி வீட்ல யார்கிட்டயும் உதவி கேட்க வேண்டியதில்லை. நூற்றுக்கு நூறு சதவீதம் மொத்த சமையலையும் பக்குவமா செஞ்சு முடிக்குது ஏ.ஐ.,மெஷின்.

அரைக்க, அவிக்க, வதக்க, வறுக்கன்னு எல்லா வித்தையையும் காட்டும், 'ஆல் இன் ஒன் ஸ்மார்ட் குக்கிங் அசிஸ்டன்ட்' இப்போ கிச்சன்ல ராஜாங்கம் பண்ண ஆரம்பிச்சிடுச்சு.

8 இன்ச் டச் ஸ்கிரீனில், 750க்கும் அதிகமான ரெசிபிக்கள் இதுல டீபால்ட்டா இருக்கு. இன்னைக்கு என்ன சாப்பிடணும்னு நீங்க செலக்ட் பண்ணினா மட்டும் போதும்.
Latest Tamil News
அதுவே சமைக்கும் முறையை காட்டி, டெம்பரேச்சரை கரெக்டா செட் பண்ணி சமையலை அசத்தலா முடிச்சிடும். அடிக்கடி கரண்டிய வெச்சு கிண்டுறது, பாத்திரத்தை மாத்துறதுன்னு எந்த டென்ஷனும் இல்ல.

எனக்கு சமைக்கவே தெரியாதுன்னு சொல்ற லிட்டில் பிரின்சஸ்களுக்கும் சரி, வீட்ல உள்ளவங்களுக்கு சர்ப்ரைஸா ஏதாச்சும் சமைச்சு கொடுக்கணும்னு நினைக்குறவங்களுக்கும் சரி... இந்த ஏ.ஐ., குக்கிங் மெஷின் ஒரு சூப்பர் சாய்ஸ்!




வேலைக்கு போறவங்களுக்கு ரொம்ப யூஸ்புல்லா இருக்கும்!



ரொம்ப கம்மியான எண்ணெய் யூஸ் பண்ணி, அதே டேஸ்ட்டோட சூப்பரா சமைக்க முடியுது. நேரமும் ரொம்ப மிச்சமாகுது. புரோக்ராம்ல ரெசிபி இருக்கிறதால, ஒரு பட்டனை தட்டிட்டு அது சொல்ற அளவுக்கு பொருட்களை உள்ளே போட்டா போதும். கொஞ்ச நேரத்துல கமகம சமையல் ரெடி. இதுலயே காய் நறுக்குற ஆப்ஷனும் இருக்குறதால வெங்காயம் நறுக்கக்கூட நாம கஷ்டப்பட வேண்டாம். மொபைல் லயே கன்ட்ரோல் பண்ணலாம்ங்கிறதால வேலைக்கு போறவங்களுக்கு இது ரொம்பவே யூஸ்புல். ஒரு பட்டனை அழுத்தினால் போதும்; அதுவே கிளீன் செய்துவிடும்.
- கீர்த்தனா இல்லத்தரசி

Advertisement