பூட்டை மாரியம்மன் கோவில் ஆடி மாதத் தேர் திருவிழா
சங்கராபுரம்: சங்கராபுரம் அடுத்த பூட்டை மாரியம்மன் கோவிலில் ஆடி மாத தேர் திருவிழா நடந்தது.
விழாவையொட்டி நேற்று காலை சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை நடந்தது. மாலை சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு மற்றும் ஜாகிர்தார் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தைத் துவக்கி வைத்தனர். சங்கராபுரம் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த 5000க்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். திருக்கோவிலுார் டி.எஸ்.பி., பார்த்திபன் மேற்பார்வையில், 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement