தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு; வானிலை மையம் எச்சரிக்கை
சென்னை: தமிழகத்தில் இன்று (ஆகஸ்ட் 03) காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், தேனி, கோவை, நீலகிரி ஆகிய 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதன் அறிக்கை: வட உள்கர்நாடகத்தில் இருந்து குமரிக்கடல் பகுதி வரை, தென் உள்கர்நாடகா, கேரளா மற்றும் தமிழகம் வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதையும், தெற்கு குஜராத்தில் இருந்து கேரளா வரை மற்றொரு காற்றழுத்த தாழ்வு பாதையும் நிலவுகிறது. இதன் காரணமாக இன்று (ஆகஸ்ட் 03) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
* காஞ்சிபுரம்,
* செங்கல்பட்டு,
* திருவண்ணாமலை,
* விழுப்புரம்,
* கடலூர்,
* தேனி,
* கோவை,
* நீலகிரி
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், வடகடலோர தமிழகத்தில் சில இடங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று மிதமான மழை பெய்யலாம்.
ஆகஸ்ட் 6ம் தேதி கனமழை பெய்ய
வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
* தேனி (மலைப்பகுதிகள்)
* திருநெல்வேலி (மலைப்பகுதிகள்)
ஆகஸ்ட் 7ம் தேதி கனமழை பெய்ய
வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
* திருநெல்வேலி (மலைப்பகுதிகள்)
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தென் மாவட்டங்களில் மழை இல்லையா...மேலும்
-
பேஸ்புக்கில் பிரதமர் மோடி வெளியிட்ட வீடியோ நீக்கப்பட்ட விவகாரம்: மெட்டா நிறுவனத்துக்கு பார்லி குழு கிடுக்கிப்பிடி
-
இந்திய மருத்துவ முறை பட்டப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க சென்டாக் காலக்கெடு நீட்டிப்பு
-
இயக்க நாள் விழா
-
ஈஸ்வரன் கோவில் பாலம் முதல்வர் இன்று திறப்பு
-
சிறுமி பலாத்காரம் வாலிபர் மீது ‘போக்சோ’
-
ரெகுலர் பேனர்: 2 திடீர் திருப்பம்