உடல்நல குறைவிலும் பயணிகளை காப்பாற்றிய அரசு பஸ் டிரைவர்

பழநி: பழநி கோதைமங்கலம் அருகே அரசு பஸ் டிரைவருக்கு உடல்நல பிரச்னை ஏற்பட்ட போதும், பயணிகள் பாதிக்காத வகையில் சாலை யோரத்தில் பஸ்சை நிறுத்தி, பயணிகளின் உயிரை காப்பாற்றினார்.

ஈரோட்டில் இருந்து பழநி வந்த அரசு பஸ்சை காங்கேயத்தைச் சேர்ந்த டிரைவர் இளங்கோ 50, ஓட்டி வந்தார். கண்டக்டர் ராஜீவ் 52. பஸ்சில் 25 பயணிகளுக்கு மேல் இருந்தனர். பழநி கோதைமங்கலம் அருகே பஸ் வரும் போது டிரைவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. சுதாரித்த டிரைவர் பஸ்சை ரோட்டின் ஓரமாக நிறுத்திய பின் உடல் வியர்த்து சரிந்தார். உடனடியாக ஆம்புலன்ஸூக்கு தகவல் அளிக்கப்பட்டது. பின் பழநி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பயணிகள் வேறொரு பஸ்சில் மாற்றி அனுப்பப்பட்டனர். தனக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்ட போதும் சமயோசிதமாக பஸ்சை ஓரமாக நிறுத்தி பயணிகளை காப்பாற்றிய டிரைவரை பயணிகள் பாராட்டினர்.

Advertisement