கண்ணாடி, கார் தொழிற்சாலைகள் பார்வையிட்டார் முதல்வர் விஜய்

1

ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுாரில் உள்ள, 'செயின்ட் கோபைன்' கண்ணாடி உற்பத்தி மற்றும் 'ரெனோ' நிறுவனத்தின் கார் தொழிற்சாலைகளை, முதல்வர் விஜய் நேற்று பார்வையிட்டார்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் அருகே மாம்பாக்கத்தில், 'செயின்ட் கோபைன்' நிறுவனத்தின், மோட்டார் வாகனம் மற்றும் கட்டுமானம் போன்றவற்றுக்காக, கண்ணாடி உற்பத்தி செய்யும் ஆலை இயங்கி வருகிறது. இதை, முதல்வர் விஜய் நேற்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அங்கு தயாரிக்கப்படும், 'புளோட் கிளாஸ், கோட்டட் கிளாஸ், லேமினேட் கிளாஸ்' மற்றும் தீ எதிர்ப்பு, உயர் பாதுகாப்பு உடைய கண்ணாடி உற்பத்தி குறித்து, அந்நிறுவனத்தின் அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார்.

தொடர்ந்து, ஒரகடம், 'சிப்காட்' நிறுவனத்தின் தொழில் பூங்காவில் உள்ள, 'ரெனோ' கார் தொழிற்சாலைக்கு சென்ற முதல்வர் விஜய், அங்கு புதிதாக தயாரிக்கப்பட்ட, 'நிசான் டஸ்டர்' காரை ஓட்டி பார்த்தார். பின், ஒரகடத்தில் உள்ள சிப்காட் அலுவலகத்தில், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இதில், தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா, காஞ்சிபுரம் கலெக்டர் சினேகா மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

Advertisement