திருமணமின்றி சேர்ந்து வாழும் ஜோடிக்கும் சட்ட நிவாரணம்
புதுடில்லி: 'திருமணம் செய்து கொள்ளாமல், கணவன் - மனைவி போல உறவில் இருக்கும் பெண்களுக்கும் குடும்ப வன்முறை தடுப்பு சட்டப் பாதுகாப்பு பொருந்தும்' என, உச்ச நீதிமன்றம் மிக முக்கியமான உத்தரவை பிறப்பித்துள்ளது.
கர்நாடகாவைச் சேர்ந்த டாக்டர் லோகேஷ் என்பவர், முதல் திருமணம் நடந்ததை மறைத்து, வேறொரு பெண்ணுடன் 'லிவ் - இன்' எனப்படும் திருமணம் செய்யாமல் கணவன் - மனைவி போன்ற உறவில் வாழ்ந்து வந்துள்ளார்.
அந்த பெண், லோகேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வரதட்சணை கொடுமை, சித்ரவதை மற்றும் தீ வைத்து கொலை செய்ய முயற்சித்தல் என, அடுக்கடுக்கான கொடுமைகளை சந்தித்து வந்ததாக, குடும்ப வன்முறை தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசில் புகார் அளித்தார்.
இதை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்றம், 'குடும்ப வன்முறை சட்டப் பிரிவு 498ஏ, ரத்தாகாத திருமணம் அல்லது விவாகரத்து ஆன திருமணம் இரண்டுக்கும் பொருந்தும். அதே போல, 'லிவ்-இன்' முறையில் வாழும் பெண்களுக்கும் இந்த சட்டப்பிரிவு பாதுகாப்பு அளிக்கும்' என தீர்ப்பளித்தது.
இதனை எதிர்த்து லோகேஷ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சய் கரோல், நாங்மேகாபம் கோட்டீஸ்வர் சிங் அடங்கிய அமர்வு, உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தது. எனினும், இந்த சட்டப்பிரிவு பயன்படுத்துவது குறித்து சில கட்டுப்பாடுகளையும் விதித்தது.
அனைத்து வகை 'லிவ்-இன்' உறவுகளுக்கும் இது தானாகப் பொருந்தாது. பரஸ்பரம் திருமணம் செய்துகொள்ளும் எண்ணத்தோடு, கணவன்- -- மனைவி போன்ற சமூக மற்றும் குடும்ப அமைப்பில் வாழும் பெண்களுக்கு மட்டுமே இச்சட்டப் பாதுகாப்பு நீட்டிக்கப்படுகிறது என, உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
எல்லாவிதமான கில்மாவுக்கும் இங்கே சட்ட அங்கீகாரம் உண்டுன்னு சுப்ரீம் கோர்ட்டு வாசல்ல ஒரு போர்டு மாட்டணும்...
அருமையான சட்டமே அந்த பிரச்னை சரியாக தீர்ப்பு சொல் அது போதும். மொத்தச்சட்டத்தையும் மாற்றி செய்தி வெளியிட்டு பல பேருடைய வாழ்க்கையை வீணாக்காதே. அது இதுக்கு பொருந்தாது. இல்லை ஒரே வரியில் குடும்பம் வேண்டாம் என்று சொல்லி விடு. அனைவரும் 10 10 நாள் அங்கெங்கெ வாழ்ந்தால் உன் சட்டத்திற்கு என்ன பிரச்னை. ஒழுக்கேமே மேன்மை தரும் என்கிற நோக்கத்தில் சட்ட வார்த்தைகள் இருக்க வேண்டும்
அந்த பெண், லோகேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வரதட்சணை கொடுமை, சித்ரவதை மற்றும் தீ வைத்து கொலை செய்ய முயற்சித்தல் என, அடுக்கடுக்கான கொடுமைகளை சந்தித்து வந்ததாக, குடும்ப வன்முறை தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசில் புகார் அளித்தார்.
வீட்டிற்கு ஒரு வழக்கு கட்டாயம் என்று சட்டம் போட்டால் வழக்கறிஞர்கள் கஷ்டம் இல்லாமல் வாழலாம் அல்லவா? திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்தால் முன்பு? தற்போது சட்ட நிவாரணம். திருமணம் புரிய முதலில் பெற்றோர் சம்மதம் கட்டாயம். இறுதி காலத்தில் பெற்றோர் பாதுகாப்பு யார் பொறுப்பு? குடும்ப விவகாரங்களில் வழக்கு இறுதி. ஆரம்பத்தில் புகுந்தால் குடும்பம் பாழ்.
இது நீதிமன்றம் தானா லீசுக்கு நடத்தும் வாழ்க்கைக்கு சட்டப் பாதுகாப்பா மக்களுக்கு தேவையான முக்கியமான தீர்ப்புகள் காத்து கிடக்கும் பொழுது ஒழுக்கக்கேடான விஷயத்துக்கு அரணாக நிற்பது எந்த வகையில் பொது மக்களுக்கு பயன்படும் எங்கள் வரி பணம் அநியாயத்துக்கு துணை போகக்கூடாது.
Abolish All PowerMisusing CaseHungry & Vested Advocate Loots/Livelihoods Courts. Restore Old& Broader MahaPanchayats
சட்டப்படியோ அல்லது மத கலாச்சாரத்தின் அடிப்படையிலோ..... சேராதவர்களுக்கு எப்படி குடும்ப வன்முறை சட்டம் பொருந்தும்.....
இது ஒரு விளம்பரத்திற்காகவே.......
முதல் திருமணத்தில் விவாகரத்து பெறாமல் அடுத்த பெண்ணையும் ஏமாற்றி கொடுமையும் செய்தது கேவலமானது. இது போன்ற ஜென்மங்கள் வாழத்தகுதியற்றவை.
"...........பொள்ளாச்சி பகுதியில் உள்ள ஒரு தனியார் துணிக் கடையில் பழனிமுத்து, வேலை பார்த்தபோது, திருமணமான சங்கீதா,- 28, என்பவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டது. இருவரும், கிணத்துக்கடவு பகுதியில், வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளனர்........". எப்படி பாஸ் இவர்களுக்குமா?
இப்படி ஒரு சட்டம் இல்லாத போது கோர்ட் எப்படி தன்னிச்சையாக அறிவிக்கிறது? ஆனால், வேண்டாத விவகாரத்துல மத்திய அரசிடம் அபிப்பிராயம் கேட்டு குடுத்து விட வேண்டியது.மேலும்
-
ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,280 அதிகரிப்பு
-
தமிழக பட்ஜெட் கூட்ட தொடர் துவங்கியது; தினமலர் யூடியூப் சேனலில் நேரலை
-
சக போலீசாருக்கு விடுப்பு வழங்க லஞ்ச வசூல் அம்பலம்: எஸ்ஐ., ஏட்டு சஸ்பெண்ட்
-
அமெரிக்காவில் 28 ஆயிரம் புலம்பெயர்ந்த டிரக் டிரைவர்களின் உரிமம் ரத்து; இந்தியர்கள் பாதிப்பு
-
டில்லி போராட்டம் குறித்து திட்டமிட்டு வதந்தி பரப்பிய இன்புளுயன்சர்கள், யூடியூபர்கள்; விசாரணையில் அம்பலம்
-
அமெரிக்க அதிபர் டிரம்ப் நிதி திரட்டும் நிகழ்ச்சி; ஆயுதங்களுடன் நோட்டமிட்ட நபர் கைது