பயங்கரவாதிகளுக்கு நிதி அளித்தவர்களின் சொத்துக்களை முடக்குகிறது அமலாக்கத்துறை
சென்னை: பயங்கரவாதிகளின் கூடாரமாக செயல்பட்டு வந்த, கோவையில் உள்ள, அரபி கல்லுாரியின் சொத்துக்கள் மற்றும் அவற்றுக்கு நிதி அளித்த நன்கொடையாளர்கள் சொத்துக்களை முடக்க, அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
கடந்த, 2022 அக்., 23ல், கோவை உக்கடம் பகுதியில், கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே, அதே பகுதியை சேர்ந்த, ஐ.எஸ்., பயங்கரவாதி ஜமேஷா முபின், 28, கார் குண்டு வெடிப்பு நடத்தி பலியானார். இச்சம்பவம் குறித்து, என்.ஐ.ஏ., அதிகாரிகள் விசாரித்து, ஜமேஷா முபின் கூட்டாளிகள், 14 பேரை கைது செய்தனர்.
இவர்கள், சட்ட விரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டது தொடர்பாக, அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அவர்கள், ஜமேஷா முபின் உள்ளிட்ட பயங்கரவாதிகளுக்கு, நிதி அளித்தவர்கள் குறித்து, சென்னை, கோவை, மும்பை உட்பட, 15 இடங்களில் சோதனை நடத்தி, முக்கிய ஆவணங்களை கைப்பற்றி உள்ளனர்.
இது குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பின் தமிழக தலைவராக, கோவை உக்கடம் பகுதியை சேர்ந்த முகமது அசாருதீன், 27, செயல்பட்டு வந்ததுள்ளார்.
இவர், கடந்த, 2019ல், இலங்கையில், சர்ச் உள்ளிட்ட இடங்களில் குண்டு வெடிப்பு நடத்தி பலியான, சஹ்ரான் ஹாஷிம், 34, என்பவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளார்.
தமிழகத்தில் பயங்கரவாதத்தை வளர்க்க, சஹ்ரான் ஹாசிம் கோவைக்கு வந்து, முகமது அசாருதீனிடம், 10 லட்சம் ரூபாயை கொடுத்துள்ளார்.
மேலும், அவரின் வழி காட்டுதலின்படி, முகமது அசாருதீன் தலைமையில், ஜமேஷா முபின் மற்றும் அவரது கூட்டாளிகள், ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் பகுதியில் ஆயுத பயிற்சி பெற்றுள்ளனர்.
முகமது அசாருதீன், கேரளாவில் என்.ஐ.ஏ., எனும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இதனால், ஜமேஷா முபின் உள்ளிட்டோருக்கான நிதி தடைபட்டு போனது.
அந்த சமயத்தில், சென்னையை சேர்ந்த ஜமீல்பாஷா, 45, அவர்களுக்கு பக்கபலமாக இருந்தார். இவர், கோவை குனியமுத்துாரில் நடத்தி வந்த, அரபிக் கல்லுாரியை, பயங்கரவாதிகளின் கூடாரமாக மாற்றினார்.
கல்லுாரி வளர்ச்சி நிதி என்ற பெயரில், பயங்கரவாதிகளுக்கு பல லட்சம் ரூபாய் திரட்டி உள்ளார். நிதி திரட்டும் பணியில், ஜமேஷா முபின் கூட்டாளி தாஹா நசீர், 40, என்பவர் முக்கிய பொறுப்பாளராக இருந்து உள்ளார்.
இவரது வீட்டில் இருந்து டைரி கைப்பற்றப்பட்டது. அதில், மும்பை, ஹைதராபாத் மற்றும் சென்னை மண்ணடி பகுதியைச் சேர்ந்தவர்கள், நன்கொடை என்ற பெயரில் நிதி அளித்துள்ளனர். அவர்கள் குறித்து பட்டியல் தயாரித்து உள்ளோம். கோவையில் உள்ள, அரபிக் கல்லுாரிகள் மற்றும் நன்கொடையாளர்களின் சொத்துக்களை முடக்க உள்ளோம். அதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இவ்வாறு அவர்கள் கூறினர்.
கேரளா, மேற்கு வங்காளம் ஆகிய இரண்டு மாநிலங்களில் எல்லாம் காலி ஆகிவிடும்
எதுக்கும் நாம் இதை அமைதியா கடந்து போவோம்... இது அமைதி மார்க்கம் ...
சிறப்பான செயல். இதேபோன்று டெல்லியில் சில நாட்களுக்கு முன்பு நீட் எதிர்ப்பு போராட்டம் என்று கூறி, போலி மாணவர்களை வைத்து ஆர்ப்பாட்டம் செய்த ராகுல் போன்றவர்களின் சொத்துக்களும் முடக்கப்படவேண்டும். முதலில் அந்த காக்ரோச் ஜனதா பார்ட்டியின் அங்கீகாரத்தை நீக்கவேண்டும். காக்ரோச் சிறியதாக இருக்கும்போதே நசுக்கப்படவேண்டும். வளர்ந்துவிட்டால் Hit அடித்தாலும் சாகாது. ஜாக்கிரதை.
உண்மைமேலும்
-
டெக்னிக்கல் அனாலிசிஸ்: டெக்னிக்கல்கள் உறுதி பெற அவகாசம் தேவை
-
பி.எப்., சம்பள வரம்பு ரூ.25,000 ஆக உயர வாய்ப்பு; ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் பயன்பெறலாம்
-
'ஜீ என்டர்டெயின்மென்ட்' மீதான தடை; சந்தையில் பங்குகள் நிலை என்ன ஆகும்?
-
சந்தை வீழ்ச்சியிலும் பணம் பெருகும் மினி தொடர் - 1
-
வருகிறது முழு சூரிய கிரகணம்
-
உலகின் நீளமான நீரிணை