சந்தை வீழ்ச்சியிலும் பணம் பெருகும் மினி தொடர் - 1

- சி.கே.சிவராம்,
நிறுவனர்,
ஐகுளோபல் ஆல்டர்நேட்



இந்திய பங்கு சந்தையிலும் மியூச்சுவல் பண்டு துறையிலும் முதலீட்டாளர்களின் தேவைகள் மாறிவரும் சூழலில், சந்தை சரிவின்போது அசலை பாதுகாப்பதே முதன்மை கேள்வியாக உள்ளது. இதற்கு தீர்வாக, 'செபி' அறிமுகப்படுத்தியுள்ள புதிய முதலீட்டு வசதி எஸ்.ஐ.எப்., இதன் முழு விபரங்களை இந்த 'மினி தொடர்' வாயிலாக தெரிந்துகொள்ளலாம்.

எஸ்.ஐ.எப்., வழக்கமான மியூச்சுவல் பண்டு என்பது முன்னோக்கி மட்டுமே செல்லக்கூடிய ஒரு கார் போன்றது. சந்தை உயரும் போது மட்டுமே அதில் லாபம் கிடைக்கும்; சந்தை சரிந்தால் எதுவும் செய்ய முடியாது. ஆனால், இந்த புதிய எஸ்.ஐ.எப்., திட்டம் என்பது முன்னோக்கி செல்வதோடு, தேவைப்படும் போது பின்னோக்கியும் செல்லக்கூடிய ஒரு நவீன கார் போன்றது. சந்தை கீழே சரிந்து விழும் நேரத்திலும் தொழில்முறை நுட்பங்களை பயன்படுத்தி, முதலீட்டை பாதுகாப்பாக வழிநடத்த இது உதவுகிறது.

இத்திட்டம் 'ஹெட்ஜ் பண்டு' போன்ற பெரிய ஆபத்துகள் நிறைந்த சிக்கலான அமைப்பு அல்ல.

முக்கிய அம்சங்கள்



* இதில் முதலீடு செய்ய குறைந்தபட்ச தொகை ரூ.10 லட்சம்

* இது பெரிய முதலீட்டாளர்கள் மற்றும் அனுபவம் வாய்ந்த நபர்களுக்கு ஏற்றது

* இது முழுமையாக செபி வழிகாட்டுதலின் கீழ் இயங்கும்

* தினமும் என்.ஏ.வி., தெரிவிக்கப்படும்

* தேவைப்படும் போது பணத்தை திரும்ப பெறலாம்.
Latest Tamil News

இரட்டை பாதுகாப்பு உத்தி



1 வழக்கமான மியூச்சுவல் பண்டு போல நல்ல நிறுவன பங்குகளின் வளர்ச்சியில் 75 சதவீதம் முதலீடு செய்யப்படும்.

2 முன்பேர வர்த்தக முறையின் வாயிலாக, 25 சதவீதம் முதலீடு செய்யப்படும்.

(தொடரும்)

Advertisement