டெக்னிக்கல் அனாலிசிஸ்: டெக்னிக்கல்கள் உறுதி பெற அவகாசம் தேவை

நேற்று 189 புள்ளிகள் ஏற்றத்துடன் தொடங்கிய நிப்டி தொடர்ந்து ஏற்றம் கண்டு நாளின் இறுதியில் 390 புள்ளிகள் உயர்வுடன் முடிந்தது. பரந்த சந்தை குறியீடுகள் 18ம் ஏற்றத்துடன் முடிவடைந்தன.

இவற்றில், 'நிப்டிமிட்கேப் 50' குறியீடு குறைந்த பட்சமாக 1.08 சதவீதமும், 'நிப்டி100' குறியீடு அதிக பட்சமாக 1.55 சதவீதமும் உயர்வுடன் நிறைவடைந்தன. 21 துறை சார்ந்த குறியீடுகளில் 20 குறியீடுகள் ஏற்றத்துடனும்; 1 குறியீடு இறக்கத்துடனும் நிறைவடைந்தன.
Latest Tamil News
இவற்றில், நிப்டி ஐ.டி., குறியீடு அதிக பட்சமாக 3.28 சதவீதமும், 'நிப்டி மிட்ஸ்மால் ஹெல்த்கேர்' குறியீடு குறைந்த பட்சமாக 0.11 சதவீதமும் அதிகரித்து காணப்பட்டன. 'நிப்டி மீடியா' குறியீடு மட்டும் 3.09 சதவீத இறக்கத்துடன் நிறைவடைந்தது.

வர்த்தகம் நடந்த 3,505 நிறுவனங்களின் பங்குகளில் 2,358 ஏற்றத்துடனும்; 1,027 இறக்கத்துடனும்; 120 மாற்றம் ஏதும் இல்லாமலும் நிறைவடைந்திருந்தன.

நிப்டி சமீபத்திய கன்சாலிடேஷனுக்கு பின்னால் தீர்மானமான அதேவேளையில் திடீர் ஏற்றத்தை சந்தித்துள்ளது. இந்த திடீர் ஏற்றம் டெக்னிக்கல் அமைப்பை ஏற்றத்திற்கு சற்று வலுசேர்க்கும் வகையில் மாற்றியுள்ளது என்ற போதிலும் டெக்னிக்கல்கள் உறுதி பெற சற்று அவகாசம் தேவைப்படலாம்.

மொமென்டம் இண்டிக்கேட்டர்களான எம்.ஏ.சி.டி., ஆர்.எஸ்.ஐ., மற்றும் ஆர்.ஓ.சி., போன்றவையும் ஏற்றம் தொடர்வதற்கு ஆதரவான நிலையையே அடைந்துள்ளன. இச்சிமோகு க்ளெவுடுக்கு கணிசமான அளவில் மேலே நிப்டி நிறைவடைந்துள்ளது.

ஸ்டொக்காஸ்டிக் ஆசிலேட்டர்கள் ஓவர் பாட் என்ற நிலைமைக்கு சென்றுவிட்டது என்பது தற்போதைய சூழலில் கவனிக்கவேண்டிய ஒரு விஷயமாக உள்ளது. தற்போதைய டெக்னிக்கல் அமைப்பில் நிப்டி 24,650க்கு கீழே செல்லாத வரை பெரிய இறக்கம் வருவதற்கான வாய்ப்பு இல்லை.

Tamil News
Tamil News
Tamil News
Tamil News

நிப்டி 24,800க்கு மேலே சென்றால் 24,900-25,000 வரை செல்ல வாய்ப்புள்ளது. திடீர் ஏற்றம் கண்டிருப்பதால் டெக்னிக்கல்கள் செட்டிலாக ஓரிரு நாட்கள் ஆகக்கூடும். அதுவரை டெக்னிக்கல் அனாலிசிஸின் வழக்கமான சிக்னல்கள் சந்தையின் உடனடி நகர்வுகளை முழுமையாக பிரதிபலிக்காமல் இருக்க வாய்ப்பு உள்ளது.

Advertisement