புத்தேரி பெருமாள் கோவிலில் வரும் 7ம்தேதி திருவிளக்கு பூஜை
திட்டக்குடி:திட்டக்குடி அடுத்த புத்தேரி வரதராஜ பெருமாள் கோவிலில், வரும் 7ம்தேதி திருவிளக்கு பூஜை நடக்கிறது.
இதனை முன்னிட்டு, அன்று காலை 8:00 மணியளவில், உலக மக்கள் நலன் பெற வேண்டி, மூலவர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம், தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து, மாலை 5:00 மணியளவில் பிரகாரத்தில் உள்ள செங்கமல தாயார் சன்னதி முன்பு, திருவிளக்கு பூஜை, தீபாராதனை நடக்கிறது. பூஜையில் பங்கேற்கும் சுமங்கலி பெண்கள் குத்து விளக்கு, பூ, வாழை இலை, குங்குமம், மஞ்சள் உள்ளிட்ட பூஜை பெருட்கள் எடுத்து வர வேண்டும்.
பூஜை ஏற்பாடுகளை, பஞ்சவடீ, பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் தலைவர் கோதண்டராமன், புத்தேரி செல்வ விநாயகர் மற்றும் வரதராஜ பெருமாள் கோவில் தலைவர் தமிழ்மணி ராதாகிருஷ்ணன், ஆலய ஆலோசகர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் செய்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மேல்மலையனுார் கோவில் உண்டியலில் கைவரிசை
-
கார் - ஆம்னி பஸ் மோதல்; சிறுவன் உட்பட 3 பேர் பலி
-
குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை செயல்படுத்த... எதிர்பார்ப்பு: திருப்பத்தூரில் காவிரி குடிநீர் திட்டம் பாதிப்பு
-
தாய் கண் முன்னே மகளிடம் சில்மிஷம் செய்தவர் கைது
-
காரை எரித்த ஆசாமிகளுக்கு பொதுமக்கள் தர்ம அடி
-
தொ.மு.ச., ஆர்ப்பாட்டம்
Advertisement
Advertisement