மயிலத்தில் சாலை மறியல்

மயிலம்:  மயிலம் ஒன்றிய தி.மு.க., சார்பில், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கைது செய்யப்பட்டதை கண்டித்து, கூட்டேரிப்பட்டு நான்கு முனை சந்திப்பு அருகே, சாலை மறியல் போராட்டம் நடந்தது.

முன்னாள் எம்.எல்.ஏ., மாசிலாமணி தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் சேதுநாதன், மணிமாறன், செழியன் முன்னிலை வகித்தனர். மயிலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாஜி தலைமையிலான போலீசார், 59 பேரை கைது செய்தனர்.

இதனால், அரை மணி நேரம் வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.



 

Advertisement