தமிழக பட்ஜெட்டில் பள்ளி கல்வித்துறைக்கு ரூ.44,527 கோடி ஒதுக்கீடு
சென்னை: பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் இன்று (ஆகஸ்ட் 05) காலை 10 மணிக்கு தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்கியது.
தமிழக வெற்றிக்கழக அரசு, மே 10ம் தேதி பொறுப்பேற்றது. 2026 - 27ம் ஆண்டிற்கான பொது பட்ஜெட்டை, தாக்கல் செய்ய இன்று (ஆகஸ்ட் 05) காலை 10 மணிக்கு தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் கூடியது.
நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்து பேசியதாவது: ஆட்சிக்கு வந்த 3 மாதங்களில் ஏராளமான சாதனைகளை முதல்வர் விஜய் படைத்துள்ளார்; தவெகவின் வெற்றி ஒரு தனிப்பட்ட வெற்றி அல்ல, தமிழக மக்களின் வெற்றி. பல்வேறு சூழ்ச்சிகளை எதிர்த்து ஜனநாயகனாக இந்த சபையில் நமது முதல்வர் அமர்ந்துள்ளார். ஆட்சிக்கு வந்து 3 மாதங்களில் ஏரளாமான சாதனை செய்துள்ளார். நெஞ்சில் குடியிருக்கு தமிழ் மக்களுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

மதுபான உற்பத்தி ஆலைகளுக்கான சிறப்புக் கட்டணம் மூலம் அரசுக்கு கூடுதலாக ரூ.1,000 கோடி வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசின் பல்வேறு நடவடிக்கை மூலம் அரசுக்கு ரூ.15,000 கோடி கூடுதலாக கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாநிலத்தின் வருவாயை அதிகரிக்க வருவாய் மேம்பாட்டுக் குழுவை விரைவில் அரசு அமைக்கவுள்ளது. இவ்வாறு மரியவில்சன் பேசினார்.
வேளாண் பட்ஜெட்
வேளாண் துறைக்கான, தனி பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்பட உள்ளது. வேளாண் அமைச்சர் வினோத், வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்ய தயாராகி உள்ளார். முதல்வர் விஜய் ஒப்புதல் பெற்று, பட்ஜெட்டிற்கு இறுதி வடிவம் கொடுக்கப்பட்டு உள்ளது.
தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!
தமிழக சட்டசபை வளாகத்தில் இன்று நடக்கும் பட்ஜெட் கூட்டத்தொடர் தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு
லைவ் வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
உப்பு சப்பு இல்லாத பட்ஜெட் இதனால் மக்களுக்கு எந்த பயனும் கிடைக்கப் போவது இல்லை
தவெக அரசின் நல்ல திட்டங்கள் இடம் பெற்று இருப்பது வரவேற்கத்தக்கதுமேலும்
-
விபத்தில் சிக்கிய முதியவர் பலி
-
விளையாட்டு பக்கத்திற்கு...சுகாதார துறையில் இறகுபந்து போட்டி கடலுார், வடலுார் அணி முதலிடம்
-
ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை; ஆர்பிஐ கவர்னர் அறிவிப்பு
-
ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,280 அதிகரிப்பு
-
சக போலீசாருக்கு விடுப்பு வழங்க லஞ்ச வசூல் அம்பலம்: எஸ்ஐ., ஏட்டு சஸ்பெண்ட்
-
அமெரிக்காவில் 28 ஆயிரம் புலம்பெயர்ந்த டிரக் டிரைவர்களின் உரிமம் ரத்து; இந்தியர்கள் பாதிப்பு