மது விற்றவர் கைது
எருமப்பட்டி; எருமப்பட்டி, பவித்திரத்தை சேர்ந்தவர் பச்ச-முத்து, 62; இவர், புதுாரில் உள்ள சுடுகாட்டின் முட்புதரில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து, டூவீலர்களில் கொண்டு சென்று கள்ளத்தனமாக விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த போலீசார், பச்ச-முத்து டூவீலரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது, டூவீலரில் மது பாட்டில்களை கொண்டு சென்று விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, முட்புதரில் பதுக்கி வைத்திருந்த, 30 மதுபாட்டில்களை பறி-முதல் செய்த போலீசார், அவரை கைது செய்-தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement