மாடியில் இருந்து விழுந்த சென்ட்ரிங் தொழிலாளி பலி

குமாரபாளையம்; போதையில் இருந்த சென்ட்ரிங் தொழிலாளி, மாடியிலிருந்து தவறி விழுந்து பலியானார்.


குமாரபாளையம் அருகே, தட்டான்குட்டை பஞ்., அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் சசிக்குமார், 22; சென்ட்ரிங் தொழிலாளி. இவர், நேற்று முன்-தினம் இரவு, 10:30 மணிக்கு, வீட்டின் மொட்டை மாடியில், மது போதையில் போனில் பேசிக்-கொண்டிருந்தார். அப்போது தவறி கீழே விழுந்-ததில் பலத்த காயமடைந்தார். அவரை சிகிச்-சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் உயிரிழந்தார். இதுகு-றித்து குமாரபாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement