வல்வில் ஓரி விழா நிறைவு ரூ.83.98 லட்சத்தில் நலத்திட்டம்
நாமக்கல்; நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் வல்வில் ஓரி நிறைவு விழா நடந்தது. த.வெ.க.,-எம்.எல்.ஏ., சந்திரசேகர் முன்னிலை வகித்து, வல்வில் ஓரி படத்திற்கு மாலை அணி-வித்து மரியாதை செலுத்தி, 166 பயனாளிகளுக்கு, 83.98 லட்சம் ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவி வழங்கினார். மேலும், வில்வித்தை போட்டி-களில் வெற்றி பெற்ற வீரர்கள், கலை நிகழ்ச்சி நடத்திய கலைக்குழுவினர், பள்ளி மாணவ, மாணவியருக்கு சான்றிதழ், கேடயம் வழங்-கினார்.
நாமக்கல் கலெக்டர் மதுபாலன் தலைமை வகித்து பேசியதாவது:கொல்லிமலையை ஆண்ட கடையேழு வள்ளல்-களுள் சிறந்து விளங்கக்
கூடிய வல்வில் ஓரியின் புகழைப்போற்றும் வகையில், தமிழக அரசு சார்பில், ஆடி, 17, 18 ஆகிய இரண்டு நாட்கள், வல்வில் ஓரிவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவில், 22 அரசுத்துறை சார்பில் கண்காட்சி அரங்கம் மற்றும் பூக்கள், காய்கறிகளால் உரு-வாக்கப்பட்டிருந்த உருவங்கள் கண்காட்சி, வாச-லுார்பட்டி தாவரவியல் பூங்காவில் நடந்தது. மேலும், பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் மற்றும் இசை கலைஞர்களின் பல்வேறு கலைநி-கழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
இவ்வாறு அவர் பேசினார்.
மாவட்ட வன அலுவலர் மாதவியாதவ், ஆர்.டி.ஓ., சாந்தி, மகளிர் திட்ட இயக்குனர் சீனி-வாசன், மாவட்ட சுற்றுலா அலுவலர் காமில் அன்சர், அரசுத்துறை அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.