கண்ணனுார் மாரியம்மன் கோவிலில் பொங்கல் விழா

பள்ளிப்பாளையம்; பள்ளிப்பாளையம், ஆர்.எஸ்., சாலையில் பிர-சித்தி பெற்ற பழமையான கண்ணனுார் மாரி-யம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆடி, 18ல் திரு-விழா நடைபெறும்.

நாமக்கல், சேலம், ஈரோடு உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து பக்-தர்கள், இந்த கோவிலுக்கு வருகை தந்து பொங்கல் வைத்து வழிபாடு செய்வர். போக்குவ-ரத்து இல்லாத கால கட்டத்தில் மாட்டு வண்-டியில் வந்து, திருவிழாவில் கலந்து கொள்வர். அந்தளவுக்கு சிறப்பு பெற்ற பழமையான கோவி-லாகும். இந்தாண்டு திருவிழா, ஆடி, 1ல் துவங்கி-யது. நேற்று முன்தினம் இரவு, பக்தர்கள் தீர்த்-தக்குடம், அலகுகுத்தி வந்தனர். நேற்று அதி-காலை முதலே, ஏராளமானோர் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.

Advertisement