'அட்ராசிட்டி' செய்த இளைஞர்கள் 5 டூவீலர் பறிமுதல் செய்து வழக்கு

திருச்செங்கோடு; தீரன் சின்னமலை நினைவிடத்திற்கு சென்ற இளைஞர்கள், பொதுமக்களுக்கு இடையூறு செய்-ததால், ஐந்து டூவீலர்களை பறிமுதல் செய்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.


தீரன் சின்னமலையின், 221வது நினைவு தினத்-தையொட்டி, நேற்று, சேலம் மாவட்டம், சங்ககி-ரியில் உள்ள தீரன் சின்னமலை நினைவிடத்தில் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதற்-காக பல்வேறு கட்சியினர், திருச்செங்கோட்டை கடந்து செல்வார்கள் என்பதால், நாமக்கல் ஏ.டி.எஸ்.பி., அண்ணாதுரை, குமாரபாளையம் டி.எஸ்.பி., கவுதம், திருச்செங்கோடு இன்ஸ்-பெக்டர் வளர்மதி மற்றும் போலீசார், பரமத்தி வேலுார் ரோடு, மலைச்சுற்றி ரோடு அருகில் உள்ள ரவுண்டானாவில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அதிக சத்தம் எழுப்பும் சைலன்சர்கள் பொருத்தி, நெம்பர் பிளேட் தெரியாதபடி கொடி-கட்டி மறைத்து, 'அட்ராசிட்டி' செய்த, ஐந்து டூவீ-லர்கள் மீது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்ப-டுத்துதல், அதிக ஒலி எழுப்புதல், நம்பர் பிளேட்டை மறைத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, வாகனங்களை பறிமுதல் செய்தனர். இதையறிந்த மற்ற வாகன ஓட்டிகள், வேகத்தை குறைத்தும், நெம்பர் பிளேட்டுகளில் இருந்து கட்சி கொடியை அகற்றியும் சென்றனர்.

Advertisement