மோட்டார் மூலம் தண்ணீர் உறிஞ்சினால் இணைப்பு துண்டிப்பு: இ.ஓ., எச்சரிக்கை

சேந்தமங்கலம்; காளப்பநாயக்கன்பட்டி டவுன் பஞ்., செயல் அலு-வலர் ராஜசேகரன் வெளியிட்ட அறிக்கை:


காளப்பநாயக்கன்பட்டி டவுன் பஞ்.,ல், 15 வார்-டுகள் உள்ளன. இதில் உள்ள குடியிருப்புகளுக்கு, காவிரி ஆற்றில் இருந்தும், கொல்லிமலை அடி-வாரம் காரவள்ளி பெரிய ஆற்றில் அமைக்கப்பட்-டுள்ள கிணறுகளில் இருந்தும், குடிநீர் வினி-யோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது, தமி-ழகத்தில் போதிய மழை இல்லாததால், வறட்சி நிலவி வருகிறது. இதனால் கிணறுகளின் நீர்-மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது.காவிரி ஆற்றில் போதிய தண்ணீர் இல்லாததால், டவுன் பஞ்.,க்கு வழங்கப்படும் தண்ணீர் வெகு-வாக குறைக்கப்பட்டு விட்டது. எனவே, வீட்டு குடிநீர் இணைப்புகள், வணிக நிறுவன குடிநீர் இணைப்புகள் பெற்றுள்ளவர்கள், குடிநீரை சிக்க-னமாக பயன்படுத்த வேண்டும். மேலும், மின் மோட்டார் பயன்படுத்தி தண்ணீரை உறிஞ்சுவது, தோட்டத்திற்கு தண்ணீர் விடுவது போன்ற செயல்கள் சட்டப்படி குற்றமாகும்.
இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் கண்டுபி-டிக்கப்பட்டால், அவர்களின் மின் மோட்டார் பறி-முதல் செய்து, குடிநீர் இணைப்பு துண்டிக்கப்-படும். மேலும், அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement