20 ஆண்டு ஐஏஎஸ் பணியில் 25 முறை டிரான்ஸ்பர்; மும்பையை கலக்கும் துக்காராம் முண்டே!
-நமது நிருபர்-
நேர்மையாகவும், வாங்கும் அரசு சம்பளத்துக்கு உண்மையாகவும், நடந்து கொள்ளும் அரசு அதிகாரிகளை காண்பது இப்போது மிகவும் அபூர்வமாகி விட்டது.அத்தகைய அபூர்வ அதிகாரிகளில் ஒருவர்தான், துக்காராம் முண்டே.
மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த, 2005ம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதிகாரி.சிவில் சர்வீசஸ் தேர்வில், அகில இந்திய அளவில் 20ம் ரேங்க் பெற்று தேர்ச்சி பெற்றவர்.பணியில் சேர்ந்த காலம் முதலே, உண்மை, நேர்மை என்று இருப்பவர்; செயல்படுபவர். அவருக்கும், அரசுகளுக்கும் எப்போதும் அக்கப்போர் தான்.
விளைவு, தன் 20 ஆண்டு பணிக்காலத்தில் இதுவரை 25 முறை பணியிட மாறுதல் செய்யப்பட்டிருக்கிறார் முண்டே. எந்த பதவியில் போட்டாலும், குடைச்சலாக இருக்கிறார் என்று கருதி, மஹாராஷ்டிர மாநில அரசு அவரை, உணவுப் பாதுகாப்பு ஆணையர் என்ற பதவியில் அமர்த்தியது.
அதுவரை தூங்கி வழிந்து கொண்டிருந்த உணவு பாதுகாப்பு ஆணையத்தின் செய்தி அறிக்கைகள் வரக்கூடிய வாட்ஸ்ஆப் குழுவானது, அன்று முதல் விழித்துக் கொண்டது.
தினமும் காலை முதல் இரவு வரை, ரெய்டு...ரெய்டு... ரெய்டு...துறையின் அத்தனை அலுவலர்களையும் களத்தில் இறக்கி விட்ட முண்டே.தானும் களம் இறங்கினார்.
பெரிய நிறுவனம், சின்ன நிறுவனம், பழம் பெருமை வாய்ந்த நிறுவனம், விஐபிக்கு சொந்தமானது என்று எந்த நிறுவனமும் அவரது ரெய்டில் தப்பவில்லை.
விதிமுறைப்படி செயல்படாத நிறுவனங்கள், சுத்தம் சுகாதாரத்தை பராமரிக்காத நிறுவனங்கள், லைசன்ஸ் புதுப்பிக்கப்படாதவை, உணவுப் பொருட்களில் கலப்படம் செய்த ஆலைகள் பூட்டி சீல் வைக்கப்பட்டன.
தினம்தோறும் பத்திரிகை, தொலைக்காட்சிகளில் முண்டே ரெய்டு நடத்திய செய்திகள் தொடர்ந்து வெளியாக தொடங்கின. சக்தி வாய்ந்த நபர்கள் தொடர்புடைய நிறுவனங்கள் மீது கை வைத்ததால் இவருக்கு தினமும் ஏராளமான மிரட்டல்கள் வந்து கொண்டிருக்கின்றன. 'அதையெல்லாம் பார்த்தால் முடியுமா' என்று கூறியபடி, ரெய்டு நடவடிக்கையை தொடர்ந்து கொண்டே இருக்கிறார் முண்டே.
தனியார் நிறுவனங்களை குறிவைத்து அவர் ரெய்டு நடத்துவதாக, மும்பை கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி, ஏன் தனியார் நிறுவனங்களில் மட்டும் ரெய்டு நடத்துகிறீர்கள் என்று கேள்வி எழுப்பினார்.
மறுநாளே மும்பை உயர்நீதிமன்ற வளாகத்தில் இருக்கும் உணவகங்களில் ரெய்டு நடத்தினார் முண்டே. அந்த உணவகங்கள் லைசன்ஸ் இல்லாமல் நடத்தப்பட்டது தெரிய வந்தது. லைசன்ஸ் வாங்கிய பிறகு நடத்துங்கள் என்று மூட உத்தரவிட்டார் முண்டே.
கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 1300 உணவகங்கள், நிறுவனங்களில் ரெய்டு நடத்தியுள்ளார். 49 கோடி மதிப்புள்ள உணவுப் பொருட்கள் பறிமுதல், 1.6 லட்சம் லிட்டர் கலப்பட பால் பறிமுதல் செய்து அழித்துள்ளார்.
மும்பை மக்களும், நடப்பதை அருகில் இருந்து பார்க்கும் பத்திரிகை, தொலைக்காட்சி நிருபர்களும், 'இவர்தான் உண்மையான சிங்கம்' என்று புகழ, தன் பாணியில் ரெய்டு நடவடிக்கைகளை தொடர்ந்து கொண்டிருக்கிறார் முண்டே.
வாசகர் கருத்து (14)
N DHANDAPANI - COIMBATORE,இந்தியா
07 ஆக்,2026 - 07:43 Report Abuse
தமிழக அரசு இவரை மாற்றுதலில் கொண்டு வரவைத்து மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், கனிம வளத்துறை மற்றும் பதிவுத்துறை மூன்று துறைகளிலும் ஒவ்வொரு வருடம் உபயோகித்தால் கூட பெரும் மாற்றங்கள் கிடைக்கும் 0
0
Reply
ديفيد رافائيل - کویمبٹور,இந்தியா
06 ஆக்,2026 - 21:50 Report Abuse
இவர் தமிழ்நாட்டுக்கு வேண்டும். தமிழக அரசு இயந்திரத்தில் நிறைய மாற்றங்கள் வரும். 0
0
Reply
கோட்டையன் - ,
06 ஆக்,2026 - 18:21 Report Abuse
இவர்தான் உண்மையான சிங்கம். தமிழ்நாட்டிலும் ஒரு வெளி மாநில சிங்கம் உள்ளதாக சிலர் இங்கு காமெடி பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். 0
0
Srine Vasan - ,இந்தியா
06 ஆக்,2026 - 21:12Report Abuse
200 ரூபாய் கொத்துசா 0
0
கோட்டையன் - ,
06 ஆக்,2026 - 23:57Report Abuse
ஓ குப்பை கூட்டும் கூட்டத்தில் ஒரு கேஸா? 0
0
Reply
பாமரன் - ,
06 ஆக்,2026 - 18:04 Report Abuse
இம்புட்டு அதிரடி மற்றும் டகால்ஜி வேலைகள் நம்ம கம்பெனி ஆட்சி செய்யும் மினி சொர்க்கத்தில் நடந்தது இப்பதான் டெய்லி ஃப்ளவர்ல வர்றது... சிரிப்பு நிருபர் மல்லாக்க படுத்து கொண்டு துப்பிட்டாரோ... ஆனாலும் எங்காளு (அ)சிங்கம் ஒருத்தர் இருபதாயிரம் பொஸ்தகம் படிச்சிட்டு நாலு லட்சம் எஃப்ஐஆர் போட்டுட்டு இப்ப குப்பை பொறுக்கறாப்ல... அவர் முன்னாடி இவர்லாம் ஜுஜூபி... 0
0
kavin - ,
06 ஆக்,2026 - 21:06Report Abuse
பாமரன் இம்மாம் பெரிய கருத்து...இந்த ஒரு புல்லு கட்டு எக்ஸ்ட்ரா ...கவ்விட்டு ஓடிவிடு 0
0
Reply
ஊர்குருவி - chennai,இந்தியா
06 ஆக்,2026 - 17:37 Report Abuse
இது மிகவும் கொடூரமானது ஒருவகையில் நல்லதும்கூட .எல்லாத்துறைகளும் தூய்மையாக்கப்பட்டாலும் அதை அவ்வாறே பின்வருபவர்கள் நிர்வகிப்பார்கலா என்பது சந்தேகமே .இது நாட்டிற்கு மிகவும் கேவலமான ஒருவிஷயம் .ஒரு அதிகாரி நேர்மையாக பணிசெய்வதற்கு முடியாமல் போவது .இதுபோன்ற விவகாரங்களில்தான் நீதிமன்றங்கள் தானாக எடுத்துவிசாறிக்கும் அதிகாரத்தை பயன்படுத்தி அதிகாரிகளுக்கு பாதுகாப்பை உறுதிசெய்திடவேண்டும் .ஆனால் நீதிமன்றங்களிலும் குறைபாடு உள்ளது .அரசுகள் நாட்டின் சட்டங்களை மீறுவதற்கு நீதிமன்றங்கள்கூட துணைபோகின்றன .உதாரணம் அரசு சாராயம் விற்க அனுமதித்திருப்பது ,அரசு ஹிந்து கோவில்க்ளை நிர்வகிப்பது இரண்டுமே அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரானது ,உச்சநீதிமன்றத்தின் அங்கீகாரம் பெற்றது .நாடு எங்கே எடுத்துச்செல்லப்படுகிறது ? 0
0
Reply
V RAMASWAMY - Bengaluru,இந்தியா
06 ஆக்,2026 - 17:32 Report Abuse
இம்மாதிரி சிங்கங்கள் அனைத்து மாநிலங்களுக்கும் தேவை. Congratulations Thukaram Mundeji. 0
0
கோட்டையன் - ,
06 ஆக்,2026 - 23:54Report Abuse
இவரைப் போன்ற நெஞ்சுரம் மிக்க உண்மையான வீர சிங்கங்கள் தமிழ் நாட்டிற்கு அவசியம் தேவை. சிங்க முகமூடி போட்ட சில அசிங்க சிறு நரிகள் தமிழ்நாட்டிற்கு என்றுமே தேவையில்லை. 0
0
Reply
Gopal Kadni - ,
06 ஆக்,2026 - 17:29 Report Abuse
இவரை அடுத்த தேர்தலில் போட்டியிட சொல்லுங்க. கண்டிப்பாக வெற்றி பெறுவார் 0
0
Reply
Diraviam s - CHENNAI,இந்தியா
06 ஆக்,2026 - 17:15 Report Abuse
சபாஷ். தைரியமான அதிகாரி . 0
0
Reply
SUBBU,MADURAI - ,
06 ஆக்,2026 - 17:11 Report Abuse
என்னாது 20 வருஷத்தில 25 டிரான்ஸ்பரா? அரவிந்த் கெஜ்ரிவால் என்று ஒருவர் இருந்தார் டில்லி ஷீலா தீட்சித் ஊழல்வாதி, அருண் ஜேட்லி ஊழல்வாதி, நிதின் கட்கரி ஊழல்வாதி என்று! இதற்காக அருண் ஜேட்லியும் கட்கரியும் அவரை நீதிமன்றத்திற்கு இழுத்தார், கடைசியில் அந்த ஆம் ஆத்மி கெஜ்ரிவால் மன்னிப்பு கேட்க வேண்டியிருந்தது. ஆனால் சோனியா காந்தியும், ராகுலும், ஷீலா தீட்சித்தும் கெஜ்ரிவாலை நீதிமன்றத்திற்கு இழுக்கவே இல்லை! ஏன்? கெஜ்ரிவாலின் செயல்பாட்டு குரு அருணா ராய் (ஃபோர்டு அறக்கட்டளையால் நிதியளிக்கப்பட்டவர் மற்றும் மகசேசே விருது பெற்றவர்). அருணா ராய் சோனியா காந்திக்கு நெருக்கமானவர். 2004 to 09 காலகட்டத்தில் காங்கிரஸின் மன்மோகன்சிங் ஆட்சியில் இந்தியாவை உண்மையில் நடத்தி வந்த தேசிய ஆலோசனைக் குழுவில் (NAC) சோனியா காந்தி அவரை உறுப்பினராக்கினார். ஒரு நேர்மையான அதிகாரி பல இடமாற்றங்களைச் சந்திப்பார், ஆனால் அரவிந்த் கெஜ்ரிவால் 1995 ல் டெல்லியில் ஐ.ஆர்.சி அதிகாரியாக நியமிக்கப்பட்டு, 2005 ல் ராஜினாமா செய்தார். அவர் டெல்லியிலிருந்து ஒருபோதும் இடமாற்றம் செய்யப்படவில்லை! அதேபோல் சுனிதா கெஜ்ரிவால் 1993 ல் நியமிக்கப்பட்டு, 2015 ல் ராஜினாமா செய்தார். அவரது 22 வருடப் பணிக்காலத்தில், அவர் டெல்லியிலிருந்து ஒருபோதும் இடமாற்றம் செய்யப்படவில்லை ஏன்? ஏனென்றால், சோனியா காந்தியும் அரவிந்த் கெஜ்ரிவாலும் எப்போதும் ஒரே அணியின் அங்கங்களாக இருந்தனர். இந்தியாவில் உள்ள (deep State) டீப் ஸ்டேட் இன் இரண்டாம் திட்டமாக Plan B யாக கெஜ்ரிவால் இருந்தார். காங்கிரஸுக்கு எதிரான வாக்குகள் பாஜகவுக்குச் செல்வதைத் தடுப்பதற்காகவே அவர் உருவாக்கப்பட்டார். 0
0
A viswanathan - ,
06 ஆக்,2026 - 18:05Report Abuse
இந்த மாதிரி சிங்கங்களை கூட்டில்
அடைத்து விடுவார்களே அரசில்வாதிகளும் பணமுதலைகளும். 0
0
Reply
மேலும்
-
சட்டவிரோத போலி ஏஐ பதிவுகள் 3 மணி நேரத்திற்குள் நீக்கப்பட வேண்டும்; மத்திய அரசு
-
தமிழக சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவராக பெலிக்ஸ் ஜெரால்ட் நியமனம்
-
சென்னையில் சட்டவிரோதமாக வெட்டப்பட்ட 200 சந்தன மரங்கள்; விசாரணை தீவிரம்
-
நெசவாளர்களை ஆதரிக்க கைத்தறிப் பொருட்களை வாங்குங்கள்; பிரதமர் மோடி வேண்டுகோள்
-
அமெரிக்காவில் இந்திய வம்சாவளி பிஎச்டி மாணவர் சடலமாக மீட்பு
-
ரூ. 3.25 லட்சம் கோடிக்கு 114 ரபேல் விமான ஒப்பந்தம்; 94 விமானங்களை இந்தியாவில் தயாரிக்க பிரான்ஸ் ஒப்புதல்
Advertisement
Advertisement