நயினார்கோவில் குறுவட்ட விளையாட்டு போட்டிகள்

பரமக்குடி: பரமக்குடியில் நயினார்கோவில் குறுவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடந்தது. பரமக்குடி ஆயிர வைசிய மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஏற்று நடத்திய போட்டிகள் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடந்தது. இதில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டன.

குறுவட்டத்தைச் சேர்ந்த 48 பள்ளிகளில் இருந்து 14, 17, 19 வயது பிரிவுகளின் அடிப்படையில் போட்டியில் நடத்தப்பட்டது. தொடர்ந்து குழு மற்றும் உள்ளரங்க விளையாட்டு போட்டிகள் நிறைவடைந்து 2 நாட்கள் தடகள போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்ற மாணவர்கள் வட்டார அளவிலான போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.

–––

Advertisement