போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

சங்கராபுரம்: சங்கராபுரம் அடுத்த அரசம்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளி சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

தலைமை ஆசிரியர் ஏழுமலை தலைமை தாங்கினார். ஊர்வலத்தை, ஆசிரியர் பயிற்றுநர் சரசு தொடங்கி வைத்தார். உதவி தலைமை ஆசிரியர் சுரேஷ் முன்னிலை வகித்தார்.

ஊர்வலத்தில், 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவ, மாணவிகள் 300 பேர் போதை விழிப்புணர்வு பதாகைகளை ஏந்திச் சென்றனர். பள்ளியில் புறப்பட்ட ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் பள்ளியை அடைந்தது.

ஆசிரியர்கள் சின்னதம்பி, இளையராஜா, சத்யா, உமா, கவிதா, ஜாகிர், சவுந்தர் ஆகியோர் பங்கேற்றனர்.

Advertisement