நாட்டில் நகைக்கடன் ரூ.14.63 லட்சம் கோடியாக உயர்வு: மத்திய அரசு பதில்
கடலுார்: நாட்டின் தங்க நகைக்கடன் 14.63 லட்சம் ரூபாயாக உயர்ந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கடலுார் எம்.பி., விஷ்ணுபிரசாத் லோக்சபாவில் நாட்டில் அதிகரித்து வரும் நகைக் கடன்கள், கடன் பெறுவோருக்கான பாதுகாப்பு மற்றும் நகைகள் ஏலம் தொடர்பான கேள்விக்கு மத்திய நிதி அமைச்சகம் அளித்துள்ள பதில் வருமாறு:
வங்கிகள் வழங்கிய கடன்கள் ஆண்டுதோறும் உயர்ந்து வருகின்றன.
2023ம் ஆண்டு நாட்டின் நகைக்கடன் 6,15,341 கோடி ரூபாயாகவும்,
2024ம் ஆண்டில் 7,73,248 கோடி ரூபாயாகவும்,
2025ம் ஆண்டு 9,83,716 கோடி ரூபாயாகவும்
2026ம் ஆண்டு 14,63,118 கோடி ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.
இதில் பொதுத்துறை வங்கிகள் 11,30,940 கோடி ரூபாயும்,
தனியார் வங்கிகள் 3,06,111 கோடி ரூபாயும்,
வெளிநாட்டு வங்கிகள் 7,703 கோடி ரூபாயும்,
சிறு நிதி வங்கிகள் 18,356 கோடி ரூபாயும் கடன் வழங்கியுள்ளன.
தங்க நகைக்கடன்கள் கிராமப்புற மக்கள், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள்
வங்கி சேவையை முதன்முறையாக பயன்படுத்தும் மக்களுக்கு முறையான நிதி வசதியை வழங்குவதோடு, அதிக வட்டி வசூலிக்கும் அமைப்புசாரா கடன் வழங்குனர்களிடம் சிக்காமல் பாதுகாக்க முக்கிய பங்காற்றுகிறது.
தங்க நகைக்கடனில் வாராக்கடன் குறைந்துள்ளது. ஏலம் விடப்படும் முன்பு கடன் பெறுவோரின் உரிமைகளை பாதுகாக்க ரிசர்வ் வங்கி கட்டாயமாக்கியுள்ளது. ஏலத்திற்கு முன் போதுமான முன் அறிவிப்பு வழங்க வேண்டும். தற்போதைய தங்க மதிப்பின் குறைந்தது 90 சதவீதம் அடிப்படையில் ஏலம் விலையாக நிர்ணயிக்க வேண்டும். நிலுவைத்தொகையை கழித்த பின் மீதமுள்ள கடன் பெறுவோருக்கு திருப்பி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு நடைமுறைகள் விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும்
-
ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,280 அதிகரிப்பு
-
தமிழக பட்ஜெட் கூட்ட தொடர் துவங்கியது; தினமலர் யூடியூப் சேனலில் நேரலை
-
சக போலீசாருக்கு விடுப்பு வழங்க லஞ்ச வசூல் அம்பலம்: எஸ்ஐ., ஏட்டு சஸ்பெண்ட்
-
அமெரிக்காவில் 28 ஆயிரம் புலம்பெயர்ந்த டிரக் டிரைவர்களின் உரிமம் ரத்து; இந்தியர்கள் பாதிப்பு
-
டில்லி போராட்டம் குறித்து திட்டமிட்டு வதந்தி பரப்பிய இன்புளுயன்சர்கள், யூடியூபர்கள்; விசாரணையில் அம்பலம்
-
அமெரிக்க அதிபர் டிரம்ப் நிதி திரட்டும் நிகழ்ச்சி; ஆயுதங்களுடன் நோட்டமிட்ட நபர் கைது