பத்ரகிரி ஸ்ரீசிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆடி கிருத்திகை விழா

சிக்கமகளூரு: பத்ரகிரி ஸ்ரீசிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில், இன்று பரணி காவடி திருவிழா நடக்கிறது.

சிக்கமகளூரு மாவட்டம் பத்ரகிரியில் உள்ள ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில், கடந்த 1ம் தேதி ஆடி கிருத்திகை காவடி திருவிழா துவங்கியது. இத்திருவிழா வரும் 8ம் தேதி வரை நடக்கிறது.

இன்று (5ம் தேதி) பரணி காவடி திருவிழாவை ஒட்டி, காலை 8:00 மணிக்கு சாந்தி பூஜை; 9:00 மணிக்கு சிறுகாலை சாந்தி பூஜை; மதியம் 12:00 மணிக்கு உச்சி கால பூஜை; மாலை 5:30 மணிக்கு தீபாராதனை; இரவு 9:00 மணிக்கு இரவு கால பூஜை; நள்ளிரவு 12:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடக்கிறது.

நாளை (6ம் தேதி) ஆடிக்கிருத்திகையை ஒட்டி, அதிகாலை 4:00 மணிக்கு விஸ்வரூபதரிசனம்; 5:00 மணிக்கு விளா பூஜை; 8:00 மணிக்கு காலை சந்தி பூஜை; 9:00 மணிக்கு சிறுகாலை சந்தி பூஜை; மதியம் 12:00 மணிக்கு உச்சி கால பூஜை; மாலை 5:30 மணிக்கு தீபாராதனை; இரவு 11:00 மணிக்கு அர்த்தஜாம பூஜை நடக்கிறது.

மேலும் விபரங்களுக்கு 08282 - 267206 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement