உலக வர்த்தக அமைப்பில் இந்தியா சந்திக்கும் 9 வழக்குகள்
புதுடில்லி: உலக வர்த்தக அமைப்பில், இந்தியாவுக்கு எதிராக தற்போது ஏற்றுமதி, இறக்குமதி, சுங்கவரி விதிப்பு, மானியம், உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டம் தொடர்பான 9 வர்த்தக தகராறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணையமைச்சர் ஜிதின் பிரசாதா, பார்லிமென்ட்டில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளதாவது:
உலக வர்த்தக அமைப்பின் தகராறு தீர்வு நடைமுறையின்கீழ், இந்தியாவுக்கு எதிராக தற்போது 9 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்த வழக்குகளில் இந்தியாவின் நலன்களை பாதுகாப்பதற்காக, வர்த்தகம் மற்றும் முதலீட்டு சட்ட மையம், உலக வர்த்தக அமைப்பு ஆய்வு மையம் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட சட்ட நிறுவனங்களின் சேவைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதுவரை, இந்த 9 வழக்குகளுக்காக சுமார் 2.43 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. வழக்குகளின் முன்னேற்றத்தை பொறுத்து கூடுதல் செலவினம் ஏற்படும். இந்த அனைத்து வழக்குகளிலும், உலக வர்த்தக அமைப்பின் விதிகளுக்கு உட்பட்டே இந்தியா செயல்பட்டுள்ளதாக மத்திய அரசு வாதிட்டு வருகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
@block_B@ நாடு வழக்குகள் தொடர்புடைய துறை ஜப்பான் 2 | இரும்பு, ஸ்டீல், தகவல் தொழில்நுட்பம் சீனா 2 பி.எல்.ஐ., சூரிய மின்சார மூலப்பொருட்கள், தகவல் தொழில்நுட்பம் பிரேசில் 1 சர்க்கரை ஆஸ்திரேலியா 1 சர்க்கரை கெளதமாலா 1 சர்க்கரை ஐரோப்பிய யூனியன் 1 தகவல் தொழில்நுட்பம் சீன தைபே 1 தகவல் தொழில்நுட்பம் இந்தியா 9 ஏற்றுமதி, இறக்குமதி, சுங்கவரி, மானியம், பி.எல்.ஐ.,block_B
மேலும்
-
ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,280 அதிகரிப்பு
-
தமிழக பட்ஜெட் கூட்ட தொடர் துவங்கியது; தினமலர் யூடியூப் சேனலில் நேரலை
-
சக போலீசாருக்கு விடுப்பு வழங்க லஞ்ச வசூல் அம்பலம்: எஸ்ஐ., ஏட்டு சஸ்பெண்ட்
-
அமெரிக்காவில் 28 ஆயிரம் புலம்பெயர்ந்த டிரக் டிரைவர்களின் உரிமம் ரத்து; இந்தியர்கள் பாதிப்பு
-
டில்லி போராட்டம் குறித்து திட்டமிட்டு வதந்தி பரப்பிய இன்புளுயன்சர்கள், யூடியூபர்கள்; விசாரணையில் அம்பலம்
-
அமெரிக்க அதிபர் டிரம்ப் நிதி திரட்டும் நிகழ்ச்சி; ஆயுதங்களுடன் நோட்டமிட்ட நபர் கைது