ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை; ஆர்பிஐ கவர்னர் அறிவிப்பு
புதுடில்லி: வங்கிகளின் குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் எந்தவித மாற்றமில்லை. 5.25 சதவீதமாகவே நீடிக்கும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடனுக்கு விதிக்கப்படும் வட்டி விகிதம் ரெப்போ வட்டி விகிதம். இரு மாதங்களுக்கு ஒருமுறை ரிசர்வ் வங்கி அதிகாரிகள் கூடி , ரெப்போ வட்டி விகிதம் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கும். அதன்படி, ரெப்போ வட்டி விகிதம் குறித்த அறிவிப்பை ரிசர்வ் வங்கி இன்று வெளியிட்டுள்ளது.
அதாவது, ரெப்போ வட்டி விகிதத்தில் எந்தவித மாற்றமில்லை. ரெப்போ வட்டி விகிதம் 5.25 சதவீதமாக தொடரும் என ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா அறிவித்துள்ளார். இதனால் வீடு, வாகனக் கடன் வட்டி விகிதத்தில் மாற்றம் இருக்க வாய்ப்பில்லை.
மேலும், அவர் கூறியதாவது; 2026-27 நிதியாண்டிற்கான உண்மையான ஜிடிபி வளர்ச்சி கணிப்பு 6.7 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இது முன்பு கணிக்கப்பட்ட 6.6 சதவீதத்தை விட சற்று அதிகமாகும். முதல் காலாண்டிற்கான பணவீக்கக் கணிப்பு எதிர்பார்க்கப்பட்டதை விடக் குறைவாக உள்ளது. அதாவது, பணவீக்கம் தற்போது 5 சதவீதமாக கணிக்கப்பட்டுள்ளது. இது முன்பு எதிர்பார்க்கப்பட்ட 5.1 சதவீதத்தை விட குறைவானதாகும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
20 நிமிடங்களில் 7 இடங்களில் தாக்குதல்; துபாயில் பதற்றம்
-
10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் முதல் 12 முதியோர் இல்லங்கள் வரை… தமிழக பட்ஜெட்டில் முக்கிய திட்டங்கள் என்னென்ன?
-
தமிழக பட்ஜெட்டில் துறை வாரியாக நிதி ஒதுக்கீடு எவ்வளவு; இதோ முழு விபரம்!
-
பிரதமர் குறித்த ஏ.ஐ., அவதூறு வீடியோ; மெட்டா நிறுவனத்திற்கு மத்திய அரசு கடும் எச்சரிக்கை
-
விபத்தில் சிக்கிய முதியவர் பலி
-
விளையாட்டு பக்கத்திற்கு...சுகாதார துறையில் இறகுபந்து போட்டி கடலுார், வடலுார் அணி முதலிடம்