விபத்தில் சிக்கிய முதியவர் பலி
பண்ருட்டி: விபத்தில் காயமடைந்த முதியவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
பண்ருட்டி அடுத்த புலவன்குப்பத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன்,61; விவசாயி; இவர் கடந்த 31 ம்தேதி மாலை புலவன்குப்பத்தில் இருந்து நெய்வேலிக்கு தனது மொபட்டில் புறப்பட்டார். அவருடன், வடக்கு இருப்பு கிராமத்தை சேர்ந்த கதிரேசன் சென்றார்.
எலவத்தடி அரசு வனப்பகுதி அருகே சென்றபோது, மொபட் ஓட்டி சென்ற ராஜேந்திரன் நிலை தடுமாறி கீழே விழுந்தார். அதில், அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
உடனடியாக அவரை, கதிரேசன் மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் நேற்று முன்தினம் காலை இறந்தார்.
இதுகுறித்து முத்தாண்டிக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மாநில பூப்பந்து போட்டி பள்ளி மாணவிகள் சாதனை
-
தனலட்சுமி சீனிவாசன் பல்கலையில் ‘ஹர் கர் திரங்கா’ தேசிய கொடி ஏற்றம்
-
ஜனாதிபதி வண்ண விருது சின்னம்: மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல்
-
விஞ்ஞானிகள் கலந்துரையாடல்
-
உளுந்துார்பேட்டை அருகே பாலத்தின் தடுப்பு கட்டையில் கார் மோதி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து சென்னை நபர் பலி: 3 பேர் படுகாயம்
-
யோகா போட்டி பரிசளிப்பு விழா
Advertisement
Advertisement