ஜனாதிபதி வண்ண விருது சின்னம்: மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல்

புதுச்சேரி: புதுச்சேரி போலீசார் சீருடையில் ஜனாதிபதி வண்ண விருது சின்னம் அணிய மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

புதுச்சேரி காவல்துறையின் சிறப்பான பணியை பாராட்டி, நாட்டிலேயே மிக உயரிய விருதான ஜனாதிபதியின் வண்ண விருது அறிக்கப்பட்டுள்ளது. இந்த விருதினை போலீசாருக்கு வழங்க மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை மறுநாள் 8ம் தேதி புதுச்சேரிக்கு வருகிறார். வரும் 9ம் தேதி கோரிமேடு போலீஸ் மைதானத்தில் நடக்கும் விழாவில், ஜனாதிபதியின் வண்ண விருது வழங்கி உரையாற்றுகிறார்.

இந்நிலையில், உள்துறை சார்பு செயலர் ஹிரண் வெளியிட்டுட்ட உத்தரவில், புதுச்சேரி காவல்துறைக்கு இந்திய ஜனாதிபதியின் வண்ணக்கொடி விருது வழங்கப்பட்டதை குறிக்கும் வகையில் சின்னம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த சின்னத்தை புதுச்சேரி காவல்துறை மற்றும் இந்திய ரிசர்வ் பட்டாலியன் மற்றும் ஊர்க்காவல்படையினர் உட்பட அனைத்து காவலர்களும் தங்கள் சீருடையில் அணியலாம். இதற்கு, மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து, புதுச்சேரி கவர்னர் அனுமதி அளித்துள்ளார் என, தெரிவித்துள்ளார்.

Advertisement