விஞ்ஞானிகள் கலந்துரையாடல்
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட விவசாயிகள் மற்றும் வேளாண் விஞ்ஞானிகள் கலந்துரையாடல் நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகத்தில், அட்மா திட்டத்தின்கீழ் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, வேளாண் இணை இயக்குநர் (பொறுப்பு) சுரேஷ் தாங்கினார்.
அவர் பேசுகையில், காலநிலை மாற்றத்தால் ஏற்படும் மகசூல் இழப்பினை ஈடு செய்வதற்கு, பயிர் காப்பீடு செய்ய வேண்டும். சொட்டுநீர்ப் பாசனம், தெளிப்பு நீர்ப்பாசனம் மூலம் அதிக மகசூல் பெறலாம், என குறிப்பிட்டார்.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய தலைவர் பேராசியர் பாக்கியராஜ் பேசுகையில், கால்நடை வளர்ப்பு தொழில்நுட்பங்கள், கால்நடை வளர்ப்புக்கான இடுபொருட்கள், தாது உப்பு கட்டி மற்றும் தீவனப்புல் விதைகள் குறித்து விளக்கினார்.
மேலும், கரை மாடு வளர்ப்பு ஆடு கோழி வளர்ப்பு திட்டங்கள், கால்நடை வளர்ப்பு பயிற்சிகள், வங்கி கடனுதவி குறித்தும் விளக்கினார். கால்நடை உதவி மருத்துவர் யுவராணி பேசுகையில், கால்நடைத்துறை திட்டங்கள் குறித்தும், வேளாண்மை அலுவலர் கார்த்திகா பேசுகையில், வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை திட்டங்கள் குறித்தும் விளக்கினர்.
இதில், அட்மா திட்ட விவசாயிகள், வேளாண்துறை, கால்நடைத்துறை, வேளாண் வணிகத்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.