மாநில பூப்பந்து போட்டி பள்ளி மாணவிகள் சாதனை
விக்கிரவாண்டி: மாநில பூப்பந்து போட்டியில் பள்ளி மாணவிகள் சாதனை படைத்தனர்.
சென்னை சாய்ராம் இன்ஜினியரிங் கல்லூரியில் கடந்த ஜூலை,25 ம் தேதி அன்று நடந்த 19 வயதிற்குட்பட்ட மாநில அளவிலான பூப்பந்து போட்டியில், முட்டத்துார் ஒய்காப் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் மூன்றாம் இடம் பிடித்து வெண்கல பதக்கம் தொன்று சாதனை படைத்தனர்.
மாணவிகளுக்கு கல்லுாரி முதல்வர்கள் ராஜா, பழனிக்குமார் ஆகியோர் பரிசு, சான்றிதழ் வழங்கி பாராட்டினர்.
மாணவிகளை பள்ளி தாளாளர் ஹென்றி ஷர்மா நித்தியானந்தம் , தலைமை ஆசிரியர் டேவிட் சுரேஷ் பாபு, உடற்கல்வி ஆசிரியர் செல்வகுமார், ஆசிரியர்கள் பாராட்டினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement