தமிழக பட்ஜெட்டில் துறை வாரியாக நிதி ஒதுக்கீடு எவ்வளவு; இதோ முழு விபரம்!

10



நமது சிறப்பு நிருபர்




நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் துறை வாரியாக நிதி ஒதுக்கீடு விபரம் பின்வாருமாறு:

* சிறப்பு செயலாக்கத் துறைக்கு 17,150 கோடி ரூபாய் ஒதுக்கீடு

* தொழிலாளர் நலன் மற்றும் மேம்பாட்டுத்துறைக்கு ரூ.2,022 கோடி ஒதுக்கீடு

* இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறைக்கு ரூ.1,051 கோடி ஒதுக்கீடு

* பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.44,527 கோடி ஒதுக்கீடு

* உயர்கல்வித்துறைக்கு ரூ.8,393 கோடி ஒதுக்கீடு

* மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு ரூ.23,357 கோடி ஒதுக்கீடு

* சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறைக்கு ரூ.9,818 கோடி ஒதுக்கீடு

* மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கு ரூ.1485 கோடி நிதி ஒதுக்கீடு

* கூட்டுறவுத்துறைக்கு ரூ.8,028 கோடி ஒதுக்கீடு

* செயற்கை நுண்ணறிவு (ஏஐ) துறைக்கு ரூ.398 கோடி ஒதுக்கீடு

* கைத்தறி, கதர் துறைக்கு ரூ.1678 கோடி ஒதுக்கீடு

* ஜவுளி தொழில்துறைக்கு ரூ.60 கோடி நிதி ஒதுக்கீடு

* சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறைக்கு ரூ.2142 கோடி ஒதுக்கீடு


* வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறைக்கு ரூ.8852 கோடி ஒதுக்கீடு.

* மின்சாரத்துறைக்கு ரூ.15,828 கோடி நிதி ஒதுக்கீடு

* தொழில்துறைக்கு ரூ.4,414 கோடி நிதி ஒதுக்கீடு

* கால்நடை பராமரிப்பு பால் மற்றும் மீன்வளத்துறைக்கு ரூ.4,880 கோடி நிதி ஒதுக்கீடு

* வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறைக்கு ரூ.8,852 கோடி

* நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறைக்கு ரூ.21,524 கோடி

* போக்குவரத்து துறைக்கு ரூ.13,561 கோடி

* நீர்வளத்துறைக்கு ரூ.9,264 கோடி

* எரிசக்தித்துறைக்கு ரூ.15,828 கோடி

* ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறைக்கு ரூ.39,609 கோடி

* நகராட்சி நிர்வாகத்துறைக்கு ரூ.29,863 கோடி நிதி ஒதுக்கீடு

* ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியர் நலத்துறைக்கு ரூ.47,240 கோடி ஒதுக்கீடு

*நீதி, நிர்வாகத்துறைக்கு ரூ.2,486 கோடி ஒதுக்கீடு


* ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு ரூ.708 கோடி ஒதுக்கீடு


பிரத்யேக வீடியோ!

தவெக அரசின் முதல் பட்ஜெட்; முக்கிய அம்சங்கள் என்னென்ன?- தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு

தினமலர் பிரத்யேக வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

Advertisement