வேளாண் துறைக்கு தனி பட்ஜெட்; சட்டசபையில் இன்று தாக்கல்

2

சென்னை: தமிழக வெற்றிக் கழக அரசின் வேளாண் துறைக்கான தனி பட்ஜெட், சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது.

தமிழக வெற்றிக் கழக அரசு, வேளாண் துறைக்கு தனி பட்ஜெட்டை தொடர முடிவு செய்துள்ளது. இதற்காக, மாநிலம் முழுதும் விவசாயிகளிடம் கருத்து கேட்பு கூட்டம் நடந்தது.

இந்நிலையில், வேளாண் துறைக்கான தனி பட்ஜெட் இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இன்று காலை 9:30 மணிக்கு, வேளாண்துறை அமைச்சர் வினோத், முதல் முறையாக தனது வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.

Advertisement