கேரளாவில் ஆகஸ்ட்டில் அழிவை ஏற்படுத்தும் கனமழை!
மூணாறு: கேரளாவில் தென்மேற்கு பருவ மழை ஆகஸ்ட்டில் கடும் அழிவை ஏற்படுத்துவது தொடர்ந்து வருகிறது. மூணாறு அருகே ராஜமலை பெட்டி முடியில் நிலச்சரிவில் சிக்கி 70 பேர் பலியான துயர சம்பவம் நடந்து இன்றுடன் ஆறு ஆண்டுகள் ஆகிறது.
இம்மாநிலத்தில் ஆண்டு தோறும் தென்மேற்கு பருவ மழை ஜூனில் துவங்கி செப்டம்பர் இறுதி வரை நீடிக்கும். இந்த கால அளவில் ஜூலையில் மழை வலுவடைவது வழக்கம். அதன்பிறகு படிப்படியாககுறைந்து விடும்.
ஆனால் சமீபகாலமாக ஆகஸ்ட்டில் மழை அதிகரித்து உயிர் பலி உட்பட பல்வேறு சேதங்களை ஏற்படுத்தி வருகின்றது. கடந்த பத்து ஆண்டுகளை கணக்கிடும்போது 2018ல் ஆகஸ்ட்டில் கொட்டித்தீர்த்த மழை மாநிலத்தை புரட்டிப் போட்டது.
480 பேர் வரை பலியான நிலையில் கணக்கிடாத வகையில் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டன. அப்போது இடுக்கி மாவட்டத்தில் மூணாறு உட்பட பல்வேறு பகுதிகளில் 50க்கும் மேற்பட்டோர் பலியாகினர். மூணாறில் நிலச்சரிவில் சிக்கி மண்ணிற்குள் புதைந்த அரசு கல்லுாரி கட்டடம் சீரமைக்க முடியாத நிலை ஏற்பட்டது.
அதன் பிறகு மூணாறு அருகே ராஜமலை பெட்டிமுடியில் 2020 ஆக. 6ல் ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவில் சிக்கி தோட்டத் தொழிலாளர்கள் உட்பட 70 பேர் இறந்தனர். அந்த துயர சம்பவம் நடந்து இன்றுடன் ஆறு ஆண்டுகள் ஆகிறது. இந்தாண்டு ஜூலை 31ல் வலுவடைந்த பருவ மழை பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
மாநிலத்தில் மண் சரிவு மற்றும் நீர்நிலைகளில் சிக்கி நேற்று வரை 25க்கும் மேற்பட்டோர் இறந்தனர். இடுக்கி மாவட்டத்தில் இருவர் இறந்தனர் என்பது குறிப்பிடதக்கது. இது போன்ற சம்பவங்களால் ஆகஸ்ட்டில் பெய்யும் மழை மக்கள் இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.
ஒரு குறிப்பிட்ட அமைதி மார்க்கத்தினர் அதிகம் வாழும் பகுதியெனவும், மீட்பு பணிக்கு வந்த இராணுவத்தினருக்கு ஒத்துழைப்பு தர மறுத்ததாகவும் ஒரு காணோளி வந்தது. இவர்களுக்கு மனம் இரங்க ஏனோ மறுக்கிறது. தான் வாழும் நாட்டை விட மதமே முக்கியம் என்று கண் மூடித்தனமாக வாழும் மனிதர்களை சகித்துக் கொள்ள முடியவில்லை.
பேராசை, சுயநலம் = நிலச்சரிவு மற்றும் இயற்கை பேரழிவுகள்.
இது தான் நில சரிவுக்கு முக்கிய காரணம். பலவேறு தேவைக்காக மலைகள் சுரண்டப்படுவதால் மலை வலுவிழந்து, மிக மற்றும் தொடர் மழையின்போது, மலை வலுவிழந்து சரிகிறது.
கேரளாவின் சபரிமலையில் உள்ள அய்யப்பன் கோவிலுக்கு என்றைக்கு மூப்படையாத இளைஞிகள் பெண்களும் சாமி தரிசனம் செய்யலாம் என்று கோவிலின் பாரம்பரிய விதிகளை மீறப்பார்த்தார்களோ அன்று ஆரம்பித்தது இந்த அழிவு. இன்றும் தொடருகிறது.
காங்கிரேசையும் கம்மியையும் கேரளாவில் இருந்து அடித்து துரத்திவிட்டால் கேரளா பிழைக்கும். இல்லையென்றால் இதுதான் கதி
சுற்றுலாவை மேம்படுத்துகிறோம் என்ற பெயரில் மலைப்பகுதிகளில் மலை சரிவுகளில் பயணியருக்கென்று நிறைய தாங்கும் விடுதிகளை, ஹோட்டல்களை , கட்டடங்களை விதிகளுக்கு மீறி கட்டிவருகின்றனர். அரசும் கண்டுகொள்வது கிடையாது. பாதிப்பு வந்தால் மட்டும் அலறுகிறார்கள்.
பேராசை கொண்ட மனிதன் இயற்கையை அழித்துக்கொண்டு உள்ளான். இயற்கை திருப்பி கொடுக்கிறது. அவ்வளவுதான்.
வெள்ளச்சேத நிவாரணமாக தேசவிரோத மாநிலத்துக்கு ஒரு பைசா கூட மத்திய அரசு நிதி ஒதுக்கக்கூடாது ....மேலும்
-
பண்டிகை கால தேவை உயர்வு சர்க்கரை விலை புதிய உச்சம்
-
ஜூலையில் 6.5 சதவிகிதம் அதிகரித்தது ஸ்டீல் பயன்பாடு :நிகர இறக்குமதி நாடாக தொடர்கிறது இந்தியா
-
துாய எரிசக்தி தொழில்நுட்பத்தில் உலகில் முன்னிலை வகிப்பதே இலக்கு மத்திய அமைச்சர் குமாரசாமி பேச்சு
-
டீப்டெக் 'ஸ்டார்ட் அப்' 'சொலினாஸ்' ரூ.52 கோடி நிதி திரட்டியது
-
தொகுதி மறுவரையறை; எம்.பி.,க்களுக்கு முதல்வர் விஜய் அழைப்பு
-
சந்தை விலை நிலவரம் சந்தை விலை நிலவரம்