பா.ஜ., செயலாளரிடம் ரூ.50 லட்சம் மோசடி; போலீஸ் சீருடையில் வந்தவர்கள் பறித்ததாக நண்பர் நாடகம்
மதுரை: மதுரையில் பா.ஜ., மாநில செயலாளர் ராம.சீனிவாசனிடம் அவரது நண்பர் ரூ.50 லட்சம் மோசடி செய்ததாக வழக்குப்பதிவு செய்யப் பட்டது.
சட்டசபை தேர்தலில் மதுரை தெற்கு தொகுதியில் பா.ஜ., வேட்பாளராக போட்டியிட்டவர் ராம.சீனிவாசன். அச்சமயத்தில் திருப்பாலையில் வீடு ஒன்றை கட்டிக்கொண்டிருந்தார். தேர்தல் பிரசாரத்தில் 'பிஸி'யாக இருந்ததால் கட்டுமான செலவிற்காக பொறியாளரிடம் கொடுக்குமாறு புதுாரைச் சேர்ந்த நண்பர் பூமாறனிடம் ரூ.50 லட்சத்தை சீனிவாசன் கொடுத்து அனுப்பினார்.
அடுத்த சில மணி நேரத்தில் சீனிவாசனை தொடர்பு கொண்ட பூமாறன், 'போலீஸ் சீருடையில் வந்தவர்கள் என்னை தாக்கிவிட்டு பணத்தை பறித்துச்சென்றுவிட்டனர்' என்றார்.
இதன்பிறகு அவரது போன் 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டது. சில நாட்களுக்கு பிறகு பூமாறன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதை அறிந்து சீனிவாசன் நேரில் சென்றார்.
அவரிடம் பூமாறன், 'பணத்தை பறித்துக்கொண்ட கும்பல் காரில் கடத்திச் சென்று என்னை ஒரு அறையில் அடைத்தனர். பிறகு காலையில் ஏதோ ஒரு இடத்தில் காரில் இருந்து தள்ளிவிட்டதில் காயம் ஏற்பட்டது' என்றார்.
ஆனால் அவர் நாடகமாடுவதாக மத்திய குற்றப்பிரிவில் சீனிவாசன் புகார் செய்தார். தீவிர விசாரணைக்கு பிறகு, போலீசார் நேற்று முன்தினம் வழக்குப்பதிவு செய்தனர்.
இப்பல்லாம் ரோட்டோர கையேந்தி பவன்களில் சாப்பிட்டதற்கே டிஜிட்டல் முறையில் பணபரிவர்த்தனை நடக்குது. 50 லட்சத்தை ரொக்கமா கொடுத்து பணபரிவர்த்தனை பண்ணுவது பாதுகாப்பற்றது மட்டுமில்லாமல் சட்டவிரோதமானது கூட என்பது மெத்தப் படித்தவருக்கு தெரியாதா. இந்த மாதிரி அபத்தத்தை எல்லாம் பன் டிவி சீரியலில்தானே காமிப்பானுக.
உம்மை கூட ஏமாற்ற முடியுமா? அதிசயமா இருக்கு....
இவர் மேலே மிகுந்த மரியாதையை இருந்தது . ஒரு மிக்க படித்தவர் , ரூபாய் 50 லட்சம் பணம் ரொக்கமாக பரிவர்தன்னை செய்தார் என்பது மிகவும் சந்தேகத்திற்கு உட்பட்டது . பொது வாழ்வில் இருப்பவர் இதனால் வரும் பின்விளைவுக்கள் அறியாமல் இருக்க மாட்டார் . இது தான் முதல் முறையா ? அல்லது முதல் முறை வெளிச்சத்துக்கு வந்ததா ?
தேர்தல் நடைமுறைகள் அமலில் உள்ள நேரத்தில் ₹ 50,000ற்குமேல் ரொக்கம் எடுத்துச் செல்வது குற்றம். இவர் ₹50 லட்சத்தை எப்படி ரொக்கமாக வைத்து இருந்தார்?
படித்தால் மட்டும் போதாது
பகுத்தறிவு வேண்டும்.
ஹலால் செய்யப்பட்டது என்ற வாசகம் ஒட்டப்பட்ட உணவகத்தில்
நான் இதை எப்படி சாப்புடுவது என்று பிரச்சினை பண்ணும் போதே தெரிந்து விட்டது.
ஹலால் செய்யப்படாத உணவை உன்னால் சாப்பிடமுடியாதபோது ஹலால் உணவை அவர் ஏன் சாப்பிடவேண்டும்
படித்தால் மட்டும் போதாது
பகுத்தறிவு வேண்டும்.
ஹலால் செய்யப்பட்டது என்ற வாசகம் ஒட்டப்பட்ட உணவகத்தில்
நான் இதை எப்படி சாப்புடுவது என்று பிரச்சினை பண்ணும் போதே தெரிந்து விட்டது.
திருட்டு பணமா இருந்தா போலீசில் புகார் தரமாட்டார். ரொக்கமாக கொடுத்து அனுப்பினார் என்றால் அவரது சொந்த டெபாசிட்ல் இருந்து எடுத்ததாக கூட இருக்கலாம். அல்லது நகையை விற்று வந்ததாகக்கூட இருக்கலாம். என்ஜினீயர் க்கு தரவேண்டிய கடனாக கூட இருந்திருக்கலாம்.அவர் பேராராசிரியாராக வேலை பார்த்தவர். சேமிப்பு எதுவும் இருக்காதா ? அவரது வேட்பாளர் மனுவை ஆராய்ந்து பார்த்தாலே இவர் எவ்வளவு சொத்து வைத்திருக்கிறார் என்று தெரியுமே ? பாஜகவில் தேர்தல் செல்வுக்கு கொடுக்கப்பட்ட பணத்தை இவர் செலவளித்திருந்தார் என்று இருந்தால் கட்சி இவரை சும்மா விடுமா ? எதையும் ஆராயாமல் இவர் மீது குற்றம் சும்த்தும் நோக்கில் பதிவுகளை இடுவது தவறல்லவா ?
அது நேர்மையாக வந்த பணமா? அதற்க்கு வரி எல்லாம் கட்டிய பணமா?
இவர் சொல்வது ஐம்பது லட்சம் மட்டுமே அதற்கு மேலும் கொடுத்திருப்பார் அதற்கு கணக்கு காட்ட முடியாது எனவே 50 லட்சம் வரை நிறுத்திக் கொண்டுள்ளார். ஒரு பேராசிரியர் அறிவார்ந்த பேச்சாளர் எப்படி ஏமாற்றலாமா. யாரையாவது நம்பி 50 லட்சம் ரொக்கமாக கொடுக்கலாமா.